தோனியை பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக்கி அழகு பார்த்திருப்பேன் : பாகிஸ்தான் முன்னாள் வீரர் விருப்பம்

மகேந்திர சிங் தோனி

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் யாசிர் அராபத், இப்போதைய பாகிஸ்தான் அணிக்கு தோனி போன்ற ஒரு கேப்டன் அவசியம் தேவை என்று கூறியுள்ளார்.

 • Share this:
  ஓய்வு பெற்ற  பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் யாசிர் அராபத், தோனியின் தலைமைத்துவ பண்புகளை வானளாவ புழந்து பேசியுள்ளார். தோனி போன்ற ஒரு கேப்டன் இருந்திருந்தால் பாகிஸ்தான் அணி பெரிய அளவில் பயனடைந்திருக்கும் என்கிறார் யாசிர் அராபத்.

  தோனி வீரர்களின் திறமையைத் துல்லியமாகக் கணித்து அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் ஒரு சிறந்த கேட்பன் கூறுகள் கொண்டவர் என்கிறார் யாசிர் அராபத்.

  Also Read: Yuvraj Singh | என் கழுத்தைத் திருகி எறிவேன் என்றார் பிளிண்டாஃப்: 6 சிக்சர்களின் பின்னணிக் கோபம் - யுவராஜ் சிங் மனம் திறப்பு

  தற்போதைய பாகிஸ்தான் அணி திறமையானது, ஆனால் தோனி போன்ற கேப்டன் தான் இவர்களுக்கு ஊக்கமளிக்க முடியும் என்று நினைக்கிறார் யாசிர் அராபத்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  “எம்.எஸ். தோனி இப்போது விளையாடவில்லை. அவர் மட்டும் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் நான் அவரை பாகிஸ்தன் அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்திருப்பேன். இப்போதைய பாகிஸ்தான் அணிக்கு தோனி போன்ற ஒரு கேப்டன் தேவை. அவருக்கு மேன் மேனேஜ்மெண்ட் நன்றாகத் தெரியும். எங்கள் வீரர்கள் திறமைசாலிகள்தான் ஆனால் இவர்களுக்குத் தேவை தோனி போன்ற ஒரு திறமைப் படைத்த கேப்டன்.

  Also Read: Yuvraj Singh |தோனிக்கு முன் என்னைக் கேப்டனாக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன்: யுவராஜ் சிங்

  ஷோயப் அக்தர் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கலாம், அவர் தோனிக்குப் பவுலிங் செய்யும் போதெல்லாம் அவரை எப்படி பீட் செய்வது என்பது தனக்குத் தெரியாது என்று கூறுவார், தோனி உடல் ரீதியாக மன ரீதியாக வலுவானவர் என்பார் அக்தர். 90களில் தோனிக்கு முன்பாக மைக்கேல் பெவன் பினிஷராக இருந்தார். அவரது ஒருநாள் போட்டி சராசரி 50க்கும் மேல். நடப்பு வீரர்களில் பினிஷிங்கில் தோனிக்கு அருகில் கூட எந்த வீரரும் வர முடியாது” இவ்வாறு கூறினார் யாசிர் அராபத்.
  Published by:Muthukumar
  First published: