பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை
மகேந்திர சிங் தோனி
  • Share this:
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.

கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ 4 பிரிவுகளில் ஊதியம் வழங்கி வருகிறது. இதில் ஏ பிளஸ், ஏ, பி, சி என்று நான்கு வகையாக வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் சம்பள ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

2019 அக்டோபர் முதல் 2020 செப்டமர் வரையிலான இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.  ஏ பிளஸ் பிரிவில் உள்ளவர்களுக்கு 7 கோடியும்,  ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடியும்,  பி பிரிவில் உள்ளவர்களுக்கு 3 கோடியும்,  சி பிரிவில் உள்ளவர்களுக்கு 1 கோடியும் சமபளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதில் ஏ பிளஸ் கிரேடில் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏ கிரேடில் ரவிசந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, புஜாரா, கே.எல்.ராகுல், ரஹானே, ஷிகார் தவான், இஷாந்த் சர்மா, குல்திப் யாதவ், ரிஷப் பந்த் இடம் பெற்றுள்ளனர்.

பி கிரேடில் விருதமான் சஹா, உமேஷ் யாதவ், சஹால், ஹர்டிக் பாண்டியா, மயங்க் அகர்வால் இடம் பெற்றுள்ளனர். சி கிரேடில் கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹார், மனிஷ் பாண்டே, தாகூர், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading