Home /News /sports /

தோனி பேர் தான் பெரிசு, விக்கெட் கீப்பிங்கெல்லாம் வெத்து - பாகிஸ்தான் முன்னாள் வி.கீ. அதிரடி

தோனி பேர் தான் பெரிசு, விக்கெட் கீப்பிங்கெல்லாம் வெத்து - பாகிஸ்தான் முன்னாள் வி.கீ. அதிரடி

தோனி

தோனி

தோனி விக்கெட் கீப்பராக பெரிய ஆளெல்லாம் ஒன்றுமில்லை மற்ற விக்கெட் கீப்பர்களை ஒப்பிடுகையில் ஏகப்பட்ட கேட்ச்களை அதிகமாக கோட்டை விட்டுள்ளார் என்று பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் அதிரடியாகக் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தோனி இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை ஆகச்சிறந்த கேப்டன் - விக்கெட் கீப்பர் - பினிஷர், இன்னும் என்னதான் இல்லை அந்த அளவுக்கு ரசிகர்கள் அவருக்கு உயரிய இடத்தை அளித்துள்ள நிலையில் தோனி விக்கெட் கீப்பராக பெரிய ஆளெல்லாம் ஒன்றுமில்லை மற்ற விக்கெட் கீப்பர்களை ஒப்பிடுகையில் ஏகப்பட்ட கேட்ச்களை கோட்டை விட்டுள்ளார் என்று பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லடீஃப் அதிரடியாகக் கூறியுள்ளார்.

    ஒரு விக்கெட் கீப்பராக 15 ஆண்டுகள் ஆடிய தோனிக்கு கேட்ச்களை அதிகம் விட்ட விகிதம் உலகிலேயே அதிகமாக 21% என்று உள்ளது, என்கிரார் ரஷீத் லடீஃப்.

    இது தொடர்பாக ரஷீத் லடீஃப் கூறியதாவது:

    தோனி ஒரு பேட்டர்-விக்கெட் கீப்பர் (அதாவது விக்கெட் கீப்பர்-பேட்டர் இல்லை என்கிறார் லடீஃப்), நிச்சயமாக தோனி என்பது ஒரு பெரிய பெயர். ஆனால் புள்ளி விவரங்களை நோக்கினால் அவர் விட்ட கேட்ச்களின் விகிதம் 21% என்று உலகிலேயே ட்ராப் கேட்ச்களில் முன்னிலை வகிக்கிறார் தோனி. 21% என்பது மிகப்பெரிய ட்ராப் விகிதம்.

    என் ரெக்கார்டை நீங்கள் பயன்படுத்த முடியாது. இந்த குறிப்பிட்ட ரெக்கார்ட் 2002 அல்லது 2003 முதல் தான் கணக்கிடப்பட்டு வருகிறது. நானெல்லாம் அதற்குள் ஆடி முடித்து விட்டேன். ஆடம் கில்கிறிஸ்ட்டின் ட்ராப் கேட்ச் விகிதன் 11%.

    உண்மையில் மார்க் பவுச்சர் பிரமாத விக்கெட் கீப்பர், டிம் பெய்ன் தொடக்கத்தில் நன்றாக இருந்தார், ஆனால் கடைசியில் கேட்ச்களை விடத்தொடங்கினார். உண்மையில் பெரிய விக்கெட் கீப்பர் என்றால் ஆஸ்திரேலியாவின் இயன் ஹீலிதான் குறிப்பாக ஷேன் வார்னுக்கு அவர் கீப் செய்த விதம் உண்மையில் மிகப்பெரிய விஷயம்.

    கடந்த 15 ஆண்டுகளில் சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் அது குவிண்டன் டி காக் தான். 3 வடிவங்களிலும் கீப் செய்தார், டாப் பேட்டராக களமிறங்கினார்.

    இவ்வாறு கூறினார் ரஷீத் லடீஃப்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Dhoni, MS Dhoni

    அடுத்த செய்தி