விஸ்வரூபம் எடுக்கும் தோனி கீப்பிங் கிளவுஸ் சர்ச்சை: 'மகாபாரதம்' வரை இழுத்த பாகிஸ்தான்!

#ICCWorldCup2019 | #MSDhoni | 2011 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில், தோனிக்கு கவுரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டதால் அவர் இந்த முத்திரையை பயன்படுத்துகிறார்.

விஸ்வரூபம் எடுக்கும் தோனி கீப்பிங் கிளவுஸ் சர்ச்சை: 'மகாபாரதம்' வரை இழுத்த பாகிஸ்தான்!
மகேந்திரசிங் தோனி
  • News18
  • Last Updated: June 7, 2019, 9:46 PM IST
  • Share this:
உலகக் கோப்பை போட்டியில், மகேந்திர சிங் தோனி, ராணுவ முத்திரை பதித்த, கையுறையை பயன்படுத்த வேண்டாம் என்று ஐசிசி வலியுறுத்தியுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில், தோனி விக்கெட்கீப்பிங் செய்தபோது, அவர் அணிந்திருந்த கையுறையில் இடம் பிடித்திருந்த முத்திரை கேமரா மூலம் அடிக்கடி 'க்ளோஸ் அப்' செய்து காட்டப்பட்டது.


அது, இந்திய துணை ராணுவப் படையினர் மட்டுமே பயன்படுத்தும் பலிதான் ('Balidaan' ) என்ற முத்திரையாகும். தியாகம் என்ற அர்த்தம் கொண்ட முத்திரையை தோனி பயன்டுத்தியது, அவரின் ரசிகர்களால் இணையதளத்தில் கொண்டாடப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை கிளம்பியது.2011-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில், தோனிக்கு கவுரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டதால் அவர் இந்த முத்திரையை பயன்படுத்துகிறார்.இதுகுறித்து கருத்து தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொது மேலாளர் கிளேர் ஃபர்லாங் (Claire Furlong), கிரிக்கெட் போட்டியின் போது, வீரர் ஒருவர், விளம்பர ஒப்பந்த நிறுவனத்தின் முத்திரையை மட்டுமே, ஆடைகள் மற்றும் உபகரணங்களில் பயன்படுத்த முடியும் என்றார்.

எனவே, ராணுவ முத்திரை பதித்த விக்கெட்கீப்பிங் கையுறையை பயன்படுத்த வேண்டாம் என தோனிக்கு அறிவுறுத்தியதாக கூறியுள்ளார்.இதுகுறித்து, பிசிசிஐ-க்கும் கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், துணை ராணுவத்தின் 'பலிதான்' முத்திரையை தோனி பயன்படுத்துவது தொடர்பாக, அனுமதி கோரி ஐசிசி-க்கு கடிதம் எழுதியுள்ளதாக பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், விளையாட்டுப் போட்டியின் போது, தேசம், மதம், இனம், மொழி வேறுபாட்டை கடந்து வீரர்கள் செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. எனவே, ராணுவ முத்திரையை தோனி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும் கோரியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சுவத்ரி தனது ட்விட்டர் பதிவில், இங்கிலாந்துக்கு தோனி கிரிக்கெட் விளையாட தான் சென்றுள்ளார். மகாபாரத போருக்கு செல்லவில்லை. இந்திய ஊடகங்கள் ஒரு முட்டாள்தனமான வாதத்தை முன்வைக்கின்றன. தோனியை ராணுவ வீரராக நினைப்பவர்கள் அவரை சிரியா, ஆப்கானிஸ்தான் அல்லது ரவாண்டாக்கு அனுப்பி வையுங்கள். முட்டாள்கள் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Also Watch

First published: June 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading