ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்த விக்கெட் கீப்பர் தோனி, குல்தீப் யாதவுக்கு ஐடியா கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 2-வது ஒரு நாள் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் (மார்ச் 5) நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அபாரமான சதத்தால் 250 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றதால், தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் மேஸ்க்வெல் விக்கெட் திரும்புமுனையாக அமைந்தது. போட்டியின் 29-வது ஓவரை சைனா மேன் குல்தீப் யாதவ் வீசினார். அப்போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் அடித்திருந்தது.
மேக்ஸ்வெல் வந்த சற்று நேரத்திலேயே அடித்து ஆட முயன்றார். ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்து இதனைக் கணித்த விக்கெட் தோனி, குல்தீப் யாதவை மிடில் ஸ்டம்பை குறிவைத்து பந்துவீசுமாறு கூறினார். முதலிரண்டு பந்துகளை மேக்ஸ்வெல் தடுக்க, 3-வது பந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது.
வழக்கமாக, குல்தீப் யாதவ், சாஹல் உள்ளிட்டோர் பந்துவீசும்போது எதிரணி பேட்ஸ்மேன்களை வீழ்த்த பல முறை தோனி ஆலோசனை அளித்துள்ளார். அதேபோல், மீண்டும் தனது சரியான கணிப்பால் ரசிகர்களை அவர் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
VIDEO: வீரர்களை தனது விலையுயர்ந்த காரில் அழைத்துச் சென்ற தோனி!
கடைசி ஓவர் வீசுவதைவிட ஹிந்தி பேசுவதுதான் கடினம் - விஜய் சங்கர் ஓபன் டாக்!
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.