• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • திராவிட் பயிற்சியாளர், தோனி ஆலோசகர் - முன்னாள் செலக்டர் சூசகம்

திராவிட் பயிற்சியாளர், தோனி ஆலோசகர் - முன்னாள் செலக்டர் சூசகம்

ராகுல் திராவிட்

ராகுல் திராவிட்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உலகக்கோப்பை டி20-உடன் விலகிவிடுவார் என்பதால் அடுத்ததாக திராவிட் பயிற்சியாளராகவும் தோனி ஆலோசகராகவும் தொடர்ந்தால் மிக நன்றாக இருக்கும் என்கிறார் முன்னாள் அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத். தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உலகக்கோப்பை டி20-உடன் விலகிவிடுவார் என்பதால் அடுத்ததாக திராவிட் பயிற்சியாளராகவும் தோனி ஆலோசகராகவும் தொடர்ந்தால் மிக நன்றாக இருக்கும் என்கிறார் முன்னாள் அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத். தெரிவித்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் ஆலோசகராக தோனியை நியமித்ததை எம்.எஸ்.கே. பிரசாத் வரவேற்றுள்ளார். அதே போல் ரவிசாஸ்திரிக்குப் பிறகு ராகுல் திராவிட் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றால் இந்திய அணி புதிய உச்சங்களை இந்திய அணி தொடும் என்று எம்.எஸ்.கே. பிரசாத் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றில் எம்.எஸ்.கே. பிரசாத் கூறும்போது, “இந்திய அணியின் எதிர்காலம் ராகுல் திராவிட், தோனி கையில் ஒப்படைக்கப்பட்டால் அணி உச்சம் தொடும். தோனியும் திராவிடும் இந்திய அணியின் மெண்ட்டார் மற்றும் தலைமைப் பயிற்சியாளர், இது பார்ப்பதற்கே அருமையாக இருக்கும்” என்று கூறுகிறார் எம்.எஸ்.கே. பிரசாத்.

    இதுதான் பல கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமும், அதை அப்படியே பிரசாத் எதிரொலித்துள்ளார். தோனியின் கேப்டன்சி திறமை, பிட்சை கணிக்கும் திறமை, அணித்தேர்வு, உத்தி வகுப்பு பற்றி டி20 கிரிக்கெட்டில் கூற வேண்டியதில்லை. அதே போல் பயிற்சியாளராக, ராகுல் திராவிடின் திறமைகளையும் எடுத்தியம்ப வேண்டியதில்லை.

    ஏற்கெனவே யு-19 அணிகள், இந்தியா ஏ அணியிலிருந்து ஏகப்பட்ட வீரர்களை அவர் இந்திய அணிக்கு வழங்கியுள்ளார், இந்திய கிரிக்கெட் அணியின் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் இப்போது இருக்கும் அளவுக்கு வேறு எந்த காலத்திலும் இல்லை என்பதற்குக் காரணமே திராவிட் தான். இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் இலங்கைக்கு சென்று வந்தார். இதில் ஒரு தொடரை வென்றோம்.

    ஆனால் அதன் பிறகு திராவிட் இந்திய சீனியர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குரல்களும் விருப்பங்களும் வலுத்தாலும் திராவிட் கூறியது என்னவெனில், இப்போதைக்கு இலங்கை தொடர் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எந்த திட்டவட்ட முடிவும் இல்லை, என்றார் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக பிரமாதமாக வேலை செய்து வருகிறார் திராவிட். எனவே இதில் அவர் கவனம் செலுத்தவே விரும்புவதாக இதுவரை கூறப்பட்டு வருகிறது.

    ஆனால் பிரசாத் சொல்வது போல் திராவிட் பயிற்சியாளர் தோனி ஆலோசகர் என்றால் 2023 உலகக்கோப்பையை வெல்லலாம் என்பதே பலரது விருப்பமும்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: