22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் ஜி பிரிவு லீக் சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில்- செர்பியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் 62 மற்றும் 73 வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் பிரேசில் கால்பந்து ரசிகருடன் இணைந்து சென்னை அணி கேப்டன் தோனியின் 7ஆம் நம்பர் ஜெஸியை பிடித்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமீப காலங்களாக தோனி என்ன செய்தாலும் அது புகைப்படமாக மாறி இணையத்தை கலக்கும். கடந்த சில நாட்களுக்கு முன் டென்னிஸ் விளையாடிய புகைப்படம், குடும்பத்துடன் அமர்ந்து உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்த்த புகைப்படங்களில் இணையத்தில் வைரலானது.
அது மட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி தான் குடித்த தண்ணீர் பாட்டிலில் தோனி படத்தை பார்த்து எங்கு பார்த்தாலும் தோனியின் முகம் தான் என தனது இன்ஸ்டாகிராமில் வைத்த ஸ்டோரியும் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் கத்தார் கால்பந்து உலக கோப்பை போட்டி வரை தோனிக்கு ரசிகர்கள் இருப்பதற்கு இதுவும் ஒரு சாட்சி என தோனியின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Brazil, CSK, FIFA World Cup 2022, MS Dhoni