INDvPAK | ஒரு ரன்னில் அவுட்டானாலும் தல தோனி படைத்த சாதனை!

ICC World Cup 2019 | India vs Pakistan | MS Dhoni | தோனி 344 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 341 போட்டிகளிலும், ஆசிய அணிக்காக(Asia XI, 2007) 3 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடி உள்ளார்.

Vijay R | news18
Updated: June 16, 2019, 10:02 PM IST
INDvPAK | ஒரு ரன்னில் அவுட்டானாலும் தல தோனி படைத்த சாதனை!
மகேந்திர சிங் தோனி
Vijay R | news18
Updated: June 16, 2019, 10:02 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1 ரன்னில் தோனி அவுட்டாகிய போதும் புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 22வது லீக் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. போட்டியை காண மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்ட்ன சர்பராஸ் அஹமது பந்துவீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது.

இன்றையப் போட்டியில் மகேந்திர சிங் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் அதிக ஆட்டங்கள் ஆடிய 2வது வீரர் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். ராகுல் டிராவிட் 340 போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் இருந்தார். தற்போது தோனி 341 ஒரு நாள் அவரை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

டிராவிட், தோனி இருவரும் 344 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளனர். இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் விளையாடியவர்களில் தோனி 2வது இடத்தில் உள்ளார். அதாவது டிராவிட் விளையாடிய 344 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 340 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆசிய அணிக்காக 1 போட்டியிலும், ஐசிசி அணிக்காக(ICC World XI, 2005) 3 ஒரு நாள் போட்டிகளில் டிராவிட் விளையாடி உள்ளார்.



தோனி 344 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 341 போட்டிகளிலும், ஆசிய அணிக்காக(Asia XI, 2007) 3 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடி உள்ளார்.

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...