• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கேப்டனாகி விட்டோம் என்று ஷிகர் தவான் அலட்சியமாக இருக்கக் கூடாது: டி20 WC-அணியில் இடம்பெற ரன்களைக் குவிப்பது அவசியம்

கேப்டனாகி விட்டோம் என்று ஷிகர் தவான் அலட்சியமாக இருக்கக் கூடாது: டி20 WC-அணியில் இடம்பெற ரன்களைக் குவிப்பது அவசியம்

திராவிட், தவான்.

திராவிட், தவான்.

இலங்கைக்கு எதிரான குறைந்த ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் கேப்டனாகி விட்டோம் என்பதற்காக ஷிகர் தவான் குஷியாகி அலட்சியமாக இருந்து விடக்கூடாது, உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் இந்திய அணியில் தன் இடத்தை அவர் உறுதி செய்ய  வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் ஆட வேண்டும் என்று விவிஎஸ் லஷ்மண் கூறியுள்ளார்.

  • Share this:
    இலங்கைக்கு எதிராக இலங்கையில் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடுகிறது, இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான், பயிற்சியாளர் ராகுல் திராவிட்.

    இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவிஎஸ் லஷ்மண் மற்றும் இர்பான் பதான் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    இதில் விவிஎஸ் லஷ்மண் கூறும்போது, “இந்திய அணிக்காக, குறிப்பாக குறைந்த ஓவர் கிரிக்கெட்டுகளில் ஷிகர் தவான் சீரான முறையில் ஆடியதற்காக அவருக்குக் கிடைத்த பரிசுதான் கேப்டன்ஷிப் ஆகும்.

    ஷிகர் தவான் - ரோகித் சர்மா.


    ஆனால் ஷிகர் தவான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரன்களைக் குவித்து இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும், ஏனெனில் அணியில் கடும் போட்டி நிலவுகிறது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், என்று பெரிய தொடக்க பட்டாளமே காத்திருக்கிறது. விராட் கோலியும் கூட தான் டி20 போட்டிகளில் தொடக்கத்தில் இறங்க ஆவலுடன் இருப்பதாகக் கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆகவே ஷிகர் தவான் ரன்கள் குவிக்க வேண்டும். இந்திய அணியின் கேப்டன் என்பதில் அவர் உற்சாகமாக இருப்பார், யாருக்கும் இது இயல்புதான். ஆனால் அவர் கவனம் முழுதும் ரன்கள் ரன்கள் என்றே இருக்க வேண்டும். அணியில் அவரது இடத்தை நிலை நிறுத்துவது முக்கியம்” என்றார்.

    Also Read: சுப்மன் கில் காயம் பற்றி சந்தேகித்து கங்குலியை அவமதிக்கிறார் சபா கரீம்: பிசிசிஐ காட்டம்

    இர்பான் பதான் கூறும்போது, “ஷிகர் தவான் கேளிக்கைகளை விரும்பும் ஒரு ஜாலி நபர். எப்போது அவரைப் பார்த்தாலும் சிரித்து மகிழ்ந்து ஜாலியாகவே இருப்பார், எனவே அவரது கேப்டன்சியில் இளைஞர்களுக்கு உற்சாகம் பிறக்கும். ஆனால் கேப்டனாக அவர் தனக்குத் தானே நிரூபிக்க வேண்டும். ஏனெனில் ஐபிஎல் தொடரில் அவர் கேப்டன்சியில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: