களத்தில் இறங்கி அடித்து நொறுக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்- ஷிகர் தவான்

ஷிகர் தவான்

இலங்கைக்கு எதிரான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கி சாதிக்கத் துடித்து வருகின்றனர்.

 • Share this:
  ஷிகர் தவான் தலைமையில் 2-ம் நிலை இந்திய அணி 3 சர்வதேச ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், சிஎஸ்கேயின் ருதுராஜ் கெய்க்வாட், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி, இஷான் கிஷன், பிரித்வி ஷா உள்ளிட்டோரும் இந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள். இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 13-ந்தேதி கொழும்பில் நடக்கிறது.

  இந்திய அணியினர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்து இந்திய வீரர்கள் இன்று இலங்கைக்கு புறப்படுகிறார்கள். ரவிசாஸ்திரி இங்கிலாந்தில் இருப்பதால் இலங்கை தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இலங்கை தொடரையொட்டி இருவரும் ஆன்லைன் வாயிலாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

  அப்போது கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில், ‘இது மிகவும் சிறந்த அணி. எங்கள் அணிக்குள் நம்பிக்கையும், பாசிட்டிவ் சிந்தனையும், சாதிக்கும் உத்வேகமும் இருக்கிறது. நன்றாக செயல்படுவோம் என்று ஒவ்வொருவரும் நம்புகிறார்கள்.

  Also Read: ரன்களை விரைவில் எடுக்க வேண்டும் என்ற கோலிக்கு இது ஏன் தெரியவில்லை?- வெங்சர்க்கார் காட்டம்

  இது ஒரு புதிய சவால். அதே சமயம் களத்தில் எங்களது திறமையை வெளிப்படுத்த இது அருமையான வாய்ப்பு. 13-14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் கழிந்து விட்டது. எனவே எப்போது களம் இறங்கி அடித்து நொறுக்குவோம் என்று வீரர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

  இந்த தொடருக்கு தயாராக எங்களுக்கு 10-12 நாட்கள் இருக்கிறது.

  இது அனுபவமும், இளமையும் கலந்த அணி. கடினமாக உழைத்து வரும் எங்களது வீரர்கள், போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்’ என்றார்.
  Published by:Muthukumar
  First published: