தொடர்ந்து 4 சதங்கள்: முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் வரலாறு படைத்தார் தேவதூத் படிக்கல்!

தொடர்ந்து 4 சதங்கள்: முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் வரலாறு படைத்தார் தேவதூத் படிக்கல்!

தேவதூத் படிக்கல்

இலங்கை அணியின் குமார் சங்கக்கரா 2015 உலக கோப்பை தொடரிலும், தென் ஆப்பிரிக்க வீரர் ஆல்விரோ பீட்டர்சன் 2015-16 Momentum ஒருநாள் தொடரிலும் தொடர்ந்து 4 சதம் எடுத்த மற்ற இரண்டு வீரர்கள் ஆவார்கள்.

  • Share this:
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்கள் விளாசிய ஒரே இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் கர்நாடக வீரர் தேவதூத் படிக்கல்.

இந்தியாவின் மதிக்கத்தக்க கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 50 ஓவர் போட்டித்தொடரான இதில் இன்று டெல்லியின் பாலம் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், கேரளாவை எதிர்த்து நடப்பு சாம்பியனான கர்நாடகா களமிறங்கியது. இதில் கர்நாடகாவிற்காக ஆட்டத்தை தொடங்கிய அந்த அணியின் தேவதூத் படிக்கல் 119 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் அவர் தொடர்ந்து அடிக்கும் 4வது சதம் இதுவாகும்.

இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை தேவதூத் படிக்கல் படைத்தார். உலக அளவில் தேவதூத் படிக்கலையும் சேர்த்து இச்சாதனையை மொத்தம் 3 வீரர்கள் மட்டுமே செய்துள்ளனர்.

இலங்கை அணியின் குமார் சங்கக்கரா 2015 உலக கோப்பை தொடரிலும், தென் ஆப்பிரிக்க வீரர் ஆல்விரோ பீட்டர்சன் 2015-16 Momentum ஒருநாள் தொடரிலும் தொடர்ந்து 4 சதம் எடுத்த மற்ற இரண்டு வீரர்கள் ஆவார்கள்.

நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் ஒடிசாவிற்கு எதிராக 152 ரன்களும், கேரளாவுக்கு எதிராக 126* ரன்களும், ரயில்வே அணிக்கெதிராக 145* ரன்களும் எடுத்துள்ளார் தேவதூத் படிக்கல்.

கேரளாவுக்கு எதிரான இன்றைய காலிறுதிப் போட்டியில் ரவிகுமார் சமர்த் 192 ரன்கள் குவித்தார், ரவிகுமார் சமர்த் மற்றும் படிக்கல் ஜோடி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 249 ரன்கள் குவித்தது. இதன் மூலம் கர்நாடக அணி 338 ரன்களை குவித்தது. தொடர்ந்து விளையாடிய கேரளா அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடக அணி அரையிறுதிக்கும் முன்னேறியது.

விஜய் ஹசாரே தொடரில் படிக்கல் தான் அதிக ரன் குவித்த வீரராக திகழ்கிறார். 6 போட்டிகளில் 4 சதம், 2 அரை சதங்களுடன் 673 ரன்கள் குவித்துள்ளார். அவரின் சராசரி 168.25 ஆகவும் ஸ்டிரைக் ரேட் 95.59 ஆகவும் உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த 20 வயதான படிக்கல் ஐபிஎல் போட்டிகளிலும் தனது அதிரடியை காட்டி மிரளவைத்தார். கடந்த சீசனில் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரரானார்.
Published by:Arun
First published: