ஈகோவை கைவிடுங்கள்... மைதானத்தில் கோலி படித்த புத்தகம்... யாருக்காக தெரியுமா?

ஈகோவை கைவிடுங்கள்... மைதானத்தில் கோலி படித்த புத்தகம்... யாருக்காக தெரியுமா?
விராட் கோலி
  • Share this:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் இன்னங்சில் விராட் கோலி சொற்ப ரன்களில் அவுட்டானாலும் அவர் தான் தலைப்பு செய்தியாக உள்ளார். காரணம் போட்டியின் போது மைதானத்தில் அவர் படித்த புத்தகம் தான்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் விராட் கோலி 9 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ரஹானே 81 ரன்களும், ஜடேஜா 58 ரன்களும் குவித்தனர்.

இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து சரிவிலிருந்த போது ரஹோனே பொறுப்புடன் விளையாடி இந்திய அணியின் கௌரவமான ரன்னை பெற செய்தார். இதன்பின் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.


மேற்கிந்திய தீவுகள் அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்துள்ளது. இஷாந்த் சர்மா 5 விக்கெட்களை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணியை நிலைகுலைய செய்துள்ளார். ரஹானே, இஷாந் சர்மா இருவரும் இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சொற்ப ரன்களில் அவுட்டான விராட் கோலியே தலைப்பு செய்தியாக உள்ளார்.

அதற்கு காரணம் போட்டியின்போது அவர் கூலாக அமர்ந்து ஈகோவை தவிர்க்க எளிய முறைகள் என்ற ஆங்கில புத்தகத்தைப் படித்து கொண்டிருந்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பைத் தொடருக்கு பின் ரோஹித் சர்மா - விராட் கோலி இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்பட்டு வந்தது.

இதனை கோலி - ரோஹித் சர்மா மறுப்பு தெரிவித்தாலும் இவர்களின் நடவடிக்கை தொடர்ந்து ஏதோ ஒரு கருத்து வேறுபாடு இருப்பதை உறுதி செய்து வந்தது. இந்நிலையில் கோலி படிக்கும் புத்தகத்திற்கும் ரோஹித் சர்மாவிற்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா என நெட்டிசன்கள் முடிச்சு போட தொடங்கியுள்ளனர்.

Loading...

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...