SL vs AUS-பொருளாதார நெருக்கடியிலும் இலங்கை மக்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருவோம்- ஏரோன் பிஞ்ச்
SL vs AUS-பொருளாதார நெருக்கடியிலும் இலங்கை மக்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருவோம்- ஏரோன் பிஞ்ச்
ஏரோன் பிஞ்ச்
கடும் பொருளாதார நெருக்கடி, அதை விடவும் கடுமையான வரிவிதிப்பில் சிக்கி கொண்டு தவித்து வருகின்றனர் இலங்கை மக்கள். அவர்கள் முகத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் புன்னகையை வரவழைக்கும் என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஏரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடி, அதை விடவும் கடுமையான வரிவிதிப்பில் சிக்கி கொண்டு தவித்து வருகின்றனர் இலங்கை மக்கள். அவர்கள் முகத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் புன்னகையை வரவழைக்கும் என்று ஆஸ்திரேலியா கேப்டன் ஏரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சென்றுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 7-ந்தேதி கொழும்பில் நடக்கிறது.
இந்த தொடர் முடிந்ததும் அங்கு 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி பயங்கரமாக இருந்து வருகிறது.இந்த சமயத்தில் அங்கு கிரிக்கெட் போட்டி நடத்துவது பற்றி அங்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதா என்பது பற்றி தெரியவில்லை.
ஆனால் இதற்கு மத்தியில் நடக்கும் இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஏரோன் பிஞ்ச் கூறியதாவது:
“நாங்கள் இலங்கை மண்ணில் கிரிக்கெட் விளையாட உள்ளோம். இதன் மூலம் அந்த நாட்டு மக்கள் முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம். கிரிக்கெட் விளையாடுவதற்கு சிறப்பு வாய்ந்த ஒரு இடம் இலங்கை. இங்கு அளிக்கப்படும் வரவேற்பும், நட்புறவுடன் பழகும் மக்களும், கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான அவர்களின் ஆர்வமும் நம்ப முடியாத அளவுக்கு இருக்கும்.
இலங்கை அணியின் டாப் வரிசையை எடுத்துக் கொண்டால் குசல் மென்டிஸ் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர். அவருடைய நாளாக அமைந்து விட்டால் பந்துவீச்சை விளாசித்தள்ளி விடுவார். இதே போல் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா கடந்த சில ஆண்டுகளாக 20 ஓவர் கிரிக்கெட்டில் வியப்பூட்டும் வகையில் விளையாடி வருகிறார்.
நாங்கள் இலங்கைக்கு எதிராக ஒரு சில சவாலான, கடைசி வரை இழுபறியான தொடர்களில் விளையாடி உள்ளோம். இலங்கை மிகவும் அபாயகரமான ஒரு அணி' என்று கூறினார் ஏரோன் பிஞ்ச்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.