Suresh Raina | ஆயிரம் சர்ச்சைகள் கிடக்கட்டும்.. இந்தியாவுக்கு எப்படி வெல்ல வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தவர் கிரெக் சாப்பல்- வெளுத்து வாங்கிய ரெய்னா

சுரேஷ் ரெய்னா- கிரெக் சாப்பல்.

சுரேஷ் ரெய்னா தன் சுயசரிதை நூலான “Believe, What Life and Cricket Taught Me” என்பதில் சர்ச்சைக்குரிய முன்னாள் இந்திய பயிற்சியாளரான ஆஸ்திரேலியாவின் கிரெக் சாப்பலை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

  • Share this:
    கிரெக் சாப்பல் ஏற்படுத்திய தாக்கம் பெரியது என்கிறார் சுரேஷ் ரெய்னா. 2007 உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியதற்குக் காரணம் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட மூத்த வீரர்கள் ராகுல் திராவிடுக்கு ஒத்துழைக்காததே என்று கிரெக் சாப்பல் ஏற்கெனவே கூறியிருந்தார், இந்திய அணியில் இளம் வீரர்களைப் புகுத்தினார். இவரது பயிற்சிக் காலக்கட்டத்தில்தான் இந்திய அணி ராகுல் திராவிட் கேப்டன்சியில் தொடர்ச்சியாக 17 ஒருநாள் போட்டிகளில் இலக்கை விரட்டி வென்றது.

    கங்குலி தன் கிரிக்கெட்டை மேம்படுத்த விரும்பவில்லை, கேப்டனாகவே அணியில் நீடிக்கலாம் என்று இருந்ததை துல்லியமாகக் கண்டறிந்தார் கிரெக் சாப்பல், இதை அவரே சமீபத்தில் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

    Also Read:  Sunil Gavaskar: உங்களை மிரள வைத்த வேகப்பந்துவீச்சாளர்கள் யார்?: சுனில் கவாஸ்கரின் சுவாரஸ்ய பதில்!

    2011 உலகக்கோப்பையின் போது கேரி கர்ஸ்டன் பயிற்சியாளர் என்றாலும் தோனி தலைமையில் அந்த உலகக்கோப்பையை வென்றதற்கான அடிப்படை விதைகள் கிரெக் சாப்பல் பயிற்சிக் காலக்கட்டத்தில் தூவப்பட்டதே என்கிறார் சுரேஷ் ரெய்னா. 2005ம் ஆண்டு கிரெக் சாப்பல் பயிற்சியின் போதுதான் ரெய்னா அறிமுகமானார். ரெய்னா, கம்பீர், யுவராஜ் சிங், தோனி போன்றோர் கிரெக் சாப்பல் காலக்கட்டத்தில்தான் உருவாக்கப்பட்டனர்.

    அவர் தன் சுயசரிதை நூலில் குறிப்பிட்ட சில விவரங்கள் இதோ:

    அந்தத் தலைமுறை வீரர்களை வடிவமைத்ததில் கிரெக் சாப்பலுக்கு நாம் பெருமையைச் சேர்த்தே ஆக வேண்டும். அவர் விதைத்த விதைதான் 2011 உலகக்கோப்பை வெற்றி எனும் பழமாக பழுத்தது.

    ஆயிரத்தெட்டு சர்ச்சைகள் எழுந்தாலும் இருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி பெறுவது எப்படி என்பதையும் வெற்றியின் மகத்துவத்தையும் கற்றுக் கொடுத்தவர் கிரெக் சாப்பல் என்றால் அது மிகையானதல்ல.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கிரெக் சாப்பல்தான் இலக்கை விரட்டும் வித்தையைக் கற்றுக் கொடுத்தார். நாங்கள் எல்லோரும் அப்போது நன்றாக பேட் செய்தோம், அவர் ஆலோசனையெல்லாம் ரன் விரட்டலை குட்டி குட்டி இலக்காக உடைத்து அணுகும் முறையைப் பற்றியதே. இதற்கான பெருமை கிரெக் சாப்பலையும் அப்போதைய கேப்டன் ராகுல் திராவிடையுமே சாரும்.

    பேட்டிங் ஆர்டர் நிலைப்பெற்றது, நான், யுவராஜ், தோனி செட்டில் ஆனோம். அப்போது இலக்கை விரட்டுவது, எப்படி அழுத்தத்தை வெல்வது, எப்படி விரட்டுவதில் பொறுப்பேற்று வெற்றி பெறுவது என்பதைக் கற்றுக் கொண்டோம். குறிப்பாக நான் கிரெக் சாப்பலிடமிருந்து ஏகப்பட்டதைக் கற்றுக் கொண்டேன்.

    இவ்வாறு தன் நூலில் கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.
    Published by:Muthukumar
    First published: