குடும்ப வன்முறை வழக்கில் முகமது ஷமியின் பிரிந்த மனைவிக்கு ஆதரவாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முகமது ஷமியை பிரிந்த மனைவி ஹசின் ஜஹான் மற்றும் மகளுக்கு மாதம் ரூ.1.30 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள ஹசின் ஜஹான் தனது தனிப்பட்ட செலவுகளுக்காக மாதம் ரூ.50,000 ஜீவனாம்சம் என்பது மிகவும் குறைவு. ஷமியின் வருமானத்தை ஒப்பிடுகையில் இந்த தொகை குறைவதாக உள்ளதால் நான் உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றிகரமான பவுலராக முகமது ஷமி இருந்து வருகிறார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை வெற்றிகளை குவிக்கும் ஷமியின் திருமண வாழ்க்கை சோகமாகவே அமைந்தது. முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹாசின் ஜஹானுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. முகமது ஷமி மீது ஹாசின் ஜவஹான் பல்வேறு புகார்களை தெரவித்தார். வரதட்சனை கேட்டு ஷமி புண்படுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாக காவல்நிலையத்தில் பாலியல் மற்றும் குடும்ப துஷ்பிரேயாக பிரிவுகளில் புகார் அளித்தார்.
ஆனால் ஹாசின் ஜஹானின் தொடர் புகார்களுக்கு முகமது ஷமி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் முகமது ஷமி - ஹாசின் ஜஹான் விவகாரத்து கோரிய வழக்கு கொல்கத்தா குடும்பநல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. 2018 ஆம் தொடரப்பட்ட இந்த வழக்கில் ஹாசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சமும், மகளின் பராமரிப்புக்காக ரூ.3 லட்சமும் கேட்டு இருந்தார்.
2020-21 நிதியாண்டிற்கான இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமியின் வருமான வரிக் கணக்கின்படி, அவரது ஆண்டு வருமானம் ரூ. 7 கோடிக்கு மேல் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர் மிருகங்கா மிஸ்திரி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா நீதிமன்றம் முகமது ஷமி, பிரிந்த மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது.ரூ.1.30 லட்சத்தில் ரூ.50,000 ஹசின் ஜஹானின் தனிப்பட்ட ஜீவனாம்சமாகவும், மீதமுள்ள ரூ.80,000 அவருடன் தங்கியிருக்கும் மகளின் பராமரிப்புச் செலவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்த நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஹாசின் ஜஹான் நியூஸ்18 தொலைகாட்சிக்கு பேட்டியளித்தார். அதில் இந்த தீர்ப்பு எனக்கு சாதகமாக உள்ளது என்பது உண்மை தான். ஆனால் மாதம் ரூ.50,000 ஜீவனாம்சம் என்பது மிகவும் குறைவான ஒன்று. ஷமியின் வருமானத்தை ஒப்பிட்டு எனது பராமரிப்புக்கு நிர்ணயக்கப்பட்ட பணம் குறைவாக உள்ளதால் நான் உயர் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளேன்“ என்றுள்ளார்.
ஷமியின் ஆலோசகர் செலிம் ரஹ்மான் கூறுகையில், ஹசின் ஜஹான் ஒரு தொழில்முறை பேஷன் மாடலாக நிலையான வருமான ஆதாரத்தைக் கொண்டிருப்பதால், அந்த உயர் ஜீவனாம்சத் தொகைக்கான கோரிக்கை நியாயமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mohammed Shami