Home /News /sports /

இந்திய அணியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது: ஆஸி.க்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் ஏ.பி.டிவில்லியர்ஸ்

இந்திய அணியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது: ஆஸி.க்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் ஏ.பி.டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ்.

டிவில்லியர்ஸ்.

இந்தியா தன் ஏ அணியை வைத்து ஆஸி.யை அதன் சொந்த மண்ணிலேயே ஊதிவிட்டது என்று ரிக்கி பாண்டிங் உட்பட ஆஸி. ஊடகங்கள் கதறும் வேளையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே ஒரு முறை அல்ல இருமுறை வீழ்த்திய சூரர்களான இந்திய அணியின் பலத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது என்று 360 டிகிரி வீரர் என்று செல்லமாக அழைக்கப்படும் ஏ.பி.டிவில்லியர்ஸ் புகழ்ந்துள்ளார்.

    ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 2- 1 என்று இந்திய அணி கைப்பற்றியது. ரிஷப் பந்த் அபாரமாக ஆடி 89 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, ஷுப்மன் கில் ஸ்டைலிஷாக 91 ரன்கள் எடுக்க, புஜாரா நங்கூரமிட்டு 56 ரன்களை எடுக்க கடைசியில் கமின்ஸை ஒரு அபார சிக்ஸ் 2 பவுண்டரி அடித்த வாஷிங்டன் சுந்தர் என்று இளம் வீரர்கள் அசத்தினார்கள்.

    ஷர்துல் தாக்கூர், சிராஜ் அபாரமாக வீச நடராஜன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸி.யை பெரிய ஸ்கோர் எடுக்கவிடாமல் சுருட்ட உதவினார்.

    இப்படியாக இந்தியா தன் ஏ அணியை வைத்து ஆஸி.யை அதன் சொந்த மண்ணிலேயே ஊதிவிட்டது என்று ரிக்கி பாண்டிங் உட்பட ஆஸி. ஊடகங்கள் கதறும் வேளையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறியதாவது:

    என்ன மாதிரியான டெஸ்ட் மேட்ச்! இந்திய அணியின் பலம் பயமுறுத்துகிறது. ரிஷப் பந்த் 17, ஸ்வீட் நம்பர் 17, வெல் பிளேய்ட் யங் மேன், டெஸ்ட் கிரிக்கெட் அதன் உச்சபட்ச சிறப்பில் அமைந்தது, என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் டிவில்லியர்ஸ்.

    அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக இங்கு டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: AB de Villiers, India vs Australia, Rishabh pant

    அடுத்த செய்தி