டி20 போட்டியில் இரட்டை சதம்: சத்தமில்லாமல் சாதித்த இந்திய வீரர்!

சுபோத் பாதி

ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச் எடுத்திருக்கும் 178 ரன்களே சர்வதேச அளவில் டி20 போட்டியில் எடுக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

  • Share this:
டி20 போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை சத்தமில்லாமல் படைத்திருக்கிறார் இளம் வீரர் ஒருவர்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவே அறிமுகமான டி-20 வடிவ கிரிக்கெட் போட்டிகள் மிக விரைவாகவே ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நாட்கணக்கில், மணிக்கணக்கில் தொடர்ந்து கொண்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் வெறும் 3 மணி நேரத்திற்குள் நடந்து முடிந்து ரிசல்ட் தெரிந்து விடுவதால் குறைந்த ஓவர்கள் கொண்ட இந்த வடிவ கிரிக்கெட் தான் தற்போது கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றுகொண்டிருக்கிறது.

டி20 போட்டிகளை பொறுத்தவரையில் பேட்ஸ்மேன்களின் கேம் ஆகவே பார்க்கப்படுகிறது. பிட்சின் தன்மை, பேட்டின் அளவு, மைதானத்தில் அளவு என அனைத்துமே பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக மாற்றப்படுவதால் அதிரடி ஆட்டத்துக்கு பஞ்சம் இருப்பதில்லை. இதன் காரணமாக மிக குறைந்த பந்துகளிலேயே அரைசதம், சதம் என ஆட்டம் அமர்க்களப்படுகிறது.

Also Read:   டோக்யோவில் அவசர நிலை பிரகடனம்: ஒலிம்பிக் போட்டிகளுக்கு என்ன பாதிப்பு?

2005ம் ஆண்டு முதல் டி20 போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்தாலும் சர்வதேச அளவில் இதுவரை எந்தவொரு வீரரும் இந்த வடிவ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்ததில்லை. இதுவரை அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச் எடுத்திருக்கும் 178 ரன்களே சர்வதேச அளவில் டி20 போட்டியில் எடுக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

இந்த அரிய சாதனையை எந்த வீரர் முதலில் படைப்பார்கள் என கேள்வி எழுந்த போது, இத்துறை பிரபலங்கள் பலரும் ரோகித் சர்மா, ஆரோன் பிஃன்ச், ஆண்ட்ரே ரஸ்ஸல் அல்லது டேவிட் வார்னர் ஆகியோரின் பெயர்களை தெரிவித்திருந்தனர். ஆனால் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் டி20 போட்டிகளில் அநாயசமாக இரட்டை சதம் அடித்து திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

Also Read:  ‘தலைவா.. தெய்வமே..’ சென்னை திரும்பினார் ரஜினி.. ரசிகர்களால் அதிர்ந்தது விமான நிலையம்..!

டெல்லியின் சுபோத் பாதி என்ற அந்த வீரர், கிளப்புகளுக்கு இடையிலான டி20 போட்டி ஒன்றில் இரட்டை சதம் அடித்து மிரட்டியுள்ளார். இதன் மூலம் டி20 போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறார் அவர்.




டெல்லி லெவன் அணியைச் சேர்ந்த சுபோத் பாதி, சிம்பா அணிக்கு எதிரான போட்டியில் 79 பந்துகளை சந்தித்து ஆட்டமிழக்காமல் 205 ரன்களை அடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவருடைய இன்னிங்ஸில் மொத்தமாக 17 சிக்ஸர்களை அவர் நொறுக்கியிருக்கிறார். மேலும் பவுண்டரிகள் மூலமாக மட்டுமே அவர் 170 ரன்களை சேர்த்திருக்கிறார். முதல் 17 பந்துகளில் மட்டுமே அவர் 102 ரன்களை திரட்டியது இதில் குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: