அதிரடி காட்டிய தவான்! சென்னை அணிக்கு 148 ரன்கள் இலக்கு

ஸ்ரெயாஸ் ஐயர் 18 ரன்களிலும், ரிஷப் பன்ட் 15 ரன்களிலும் கோலின் இங்க்ரம் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

news18
Updated: March 26, 2019, 9:49 PM IST
அதிரடி காட்டிய தவான்! சென்னை அணிக்கு 148 ரன்கள் இலக்கு
ஸ்ரெயாஸ் ஐயர் 18 ரன்களிலும், ரிஷப் பன்ட் 15 ரன்களிலும் கோலின் இங்க்ரம் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
news18
Updated: March 26, 2019, 9:49 PM IST
சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்துள்ளது.

பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.

தோனி, ஷ்ரேயாஸ் ஐயர்


பிரித்வி ஷா 24 ரன்களில் ஆட்டமிழந்தநிலையில், தவான் நிதானமாக ஆடினார். ஸ்ரெயாஸ் ஐயர் 18 ரன்களிலும், ரிஷப் பன்ட் 15 ரன்களிலும் கோலின் இங்க்ரம் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து ஆடிய ஷிகர் தவான் 51 ரன்கள் குவித்திருந்த நிலையில், ப்ராவோ பந்து வீச்சில் தாகுரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள், சோபிக்காத நிலையில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் 147 ரன்கள் எடுத்தது.

Also see:

 
First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...