ஹைதராபாத் அணிக்கு 156 ரன்கள் இலக்கு!

டெல்லி அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 4 ரன்களிலும் ஷிகர் தவான் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

news18
Updated: April 14, 2019, 9:55 PM IST
ஹைதராபாத் அணிக்கு 156 ரன்கள் இலக்கு!
டெல்லி அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 4 ரன்களிலும் ஷிகர் தவான் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
news18
Updated: April 14, 2019, 9:55 PM IST
ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் லீக் போட்டியில் டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. டெல்லி அணி சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 4 ரன்களிலும் ஷிகர் தவான் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கோலின் முன்ரோ 40 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிஷப் பன்ட், 23 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.

Also see:

First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...