8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது இடத்துக்கு முன்னேறியது.

news18
Updated: April 2, 2019, 10:35 AM IST
8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த டெல்லி அணி!
டெல்லி
news18
Updated: April 2, 2019, 10:35 AM IST
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஐ.பி.எல் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது டெல்லி அணி. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்தது. மில்லர் 43 ரன்கள், சர்ஃபராஜ் கான் 39 ரன்கள், மந்தீப் சிங் 29 ரன்களை எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்விஷா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். தவான் 30 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களிலும், ரிஷப் பண்ட் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


16.4-வது ஓவரில் 144 ரன்கள் எடுத்திருந்த போது டெல்லி அணியின் ரிஷப் பண்ட் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் டெல்லி அணி பறிகொடுத்தது.
ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த பிறகு வந்த 7 வீரர்கள் சேர்ந்து மொத்தமாக 8 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இதில் கிறிஸ் மோரிஸ், ஹர்சல் படேல், ரபாடா, லாமிசேன் உள்ளிட்டோர் டக் அவுட் ஆனார்கள். டெல்லி அணியில் மொத்தமாக 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது இடத்துக்கு முன்னேறியது.

Loading...

 

பஞ்சாப் அணி செய்த ஹாட்ரிக் சாதனைகள்!

#KXIPvDC: ரன் எடுக்காமல் சாதனை படைக்க முடியுமா?


 

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படுதோல்வி!சென்னை அணி த்ரில் வெற்றி

First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...