ஷிகர் தவான் அதிரடி! வெற்றிக் கொடி ஏற்றி புள்ளிப் பட்டியலில் முன்னேறிய டெல்லி அணி

பிரித்வி ஷா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்கள் ஆட்டமிழந்தார்.

news18
Updated: April 14, 2019, 12:03 PM IST
ஷிகர் தவான் அதிரடி! வெற்றிக் கொடி ஏற்றி புள்ளிப் பட்டியலில் முன்னேறிய டெல்லி அணி
பிரித்வி ஷா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்கள் ஆட்டமிழந்தார்.
news18
Updated: April 14, 2019, 12:03 PM IST
கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதும் லீக் போட்டி ஈடென் கார்டென் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி. முதலில் பேட் செய்த, கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 178 குவித்தது.அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். பிரித்வி ஷா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்கள் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக ஷிகர் தவான், ரிஷப் பன்ட் ஜோடி, கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சிதறடித்தது. ரிஷப் பந்த் 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடியாக ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் 97 ரன்கள் குவித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் டெல்லி அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Also see:தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...