இறுதி ஓவர் பரபரப்பு! ஹைதராபாத்துக்கு விடை கொடுத்தது டெல்லி

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தவான் 17 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதி ஓவர் பரபரப்பு! ஹைதராபாத்துக்கு விடை கொடுத்தது டெல்லி
டெல்லி அணி
  • News18
  • Last Updated: May 8, 2019, 11:26 PM IST
  • Share this:
ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐ.பி.எல் சீசனில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ப்ளே ஆஃப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தவான் 17 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய பிரித்விஷாவுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்.


இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்ந்தனர். 56 ரன்கள் எடுத்திருந்தநிலையில், கலீல் அஹமது பந்து வீச்சில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். பின்னர், அதிரடியாக ஆடிய ரிஷப் பன்ட் 21 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தநிலையில், ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுக்கவேண்டிய சூழல் இருந்தது. கீமு பவுலும், அமித் மிஸ்ராவும் களத்தில் நின்றனர். இறுதியில் டெல்லி அணி 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Also see:
First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்