டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அருண் ஜெட்லி பெயர்!

கோலி, தவான் உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அருண் ஜெட்லி பெயர்!
அருண் ஜெட்லி
  • News18
  • Last Updated: September 12, 2019, 9:29 PM IST
  • Share this:
டெல்லியில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமீபத்தில் காலமானார். அவர், டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தார். அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில் டெல்லி சர்வதேச மைதானத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கான, நிகழ்ச்சி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இதில், கோலி, தவான் உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.


அருண் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த காலத்தில் டெல்லியைச் சேர்ந்த பலர் இந்திய அணியில் இடம்பெற்றனர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Also see:

First published: September 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading