ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட பிரித்வி ஷா.... சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி

டெல்லி அணியின் இளம் வீரர் ப்ரித்விஷா ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு, 99 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

news18
Updated: March 31, 2019, 7:27 AM IST
ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட பிரித்வி ஷா.... சூப்பர் ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி
டெல்லி கேபிடல்ஸ்
news18
Updated: March 31, 2019, 7:27 AM IST
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

டெல்லியில் நேற்று நடந்த 10-வது லீக் போட்டியில் டெல்லி, கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நாயக் 8 ரன்களிலும், கிரிஸ் லின் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுக்க கேட்பன் தினேஷ் கார்த்திக் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 8 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி 185 ரன்கள் எடுத்தது.

186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது  டெல்லி அணி. அந்த அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு, 99 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
Loading...


பிரித்வி ஷா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும் பின்னர் வந்த டெல்லி அணி வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறினர். கடைசி ஓவரில் வெற்றி பெற 6 ரன்கள் தேவை என்ற நிலையில் 5 ரன்கள் மட்டுமே சேர்க்க ஆட்டம் சமனில் முடிந்தது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 10 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டை இழந்து 7 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்த ஐபிஎல் தொடரின் முதல் சூப்பர் ஓவர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Also watch

First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626