#IPL2019: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலி நியமனம்!

#DelhiCapitals Rope In #SouravGanguly As Advisor Ahead Of #IPL2019 | டெல்லி டேர்டெவில்ஸ் அணி அண்மையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

news18
Updated: March 14, 2019, 5:11 PM IST
#IPL2019: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலி நியமனம்!
முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. (Image: Getty)
news18
Updated: March 14, 2019, 5:11 PM IST
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை ஐபிஎல் போட்டியில் விளையாடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆலோசகராக நியமித்துள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வரும் 23-ம் தேதி (மார்ச் 23) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த 11 சீசன்களில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் விளையாடி வந்த அந்த அணி, அண்மையில் தனது பெயரை டெல்லி கேப்பிட்டல்ஸ் என பெயர் மாற்றம் செய்தது. கடந்த சீசனில் இறுதியில் அந்த அணியின் கேப்டனாக இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டார்.

Delhi Capitals, டெல்லி கேப்பிட்டல்ஸ்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. (Twitter)


இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அந்த அணியின் ட்விட்டரில், “டைகர்ஸ்.. நம்முடைய ராயல் பெங்கால் டைகருக்கு ஹலோ சொல்லுங்க. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள கங்குலியை வரவேற்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.



டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக வருவாய் பெறும் பேட்ஸ்மேன்... யார் தெரியுமா...?


Also Watch...

First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...