முகப்பு /செய்தி /விளையாட்டு / இதெல்லாம் ஒரு பிட்ச்சா? டெல்லி ஆடுகளத்தை விளாசிய பாண்டிங்!

இதெல்லாம் ஒரு பிட்ச்சா? டெல்லி ஆடுகளத்தை விளாசிய பாண்டிங்!

டெல்லி அணியின் ஆலோசகர்கள் பாண்டிங் - கங்குலி. (PTI)

டெல்லி அணியின் ஆலோசகர்கள் பாண்டிங் - கங்குலி. (PTI)

#DelhiCapitals coach #RickyPonting blasts Kotla pitch | ஹைதராபாத் அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி தோல்வி அடைந்தது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பெரோஸ் ஷா கோட்லா மைதானம் மிகவும் மோசமாக இருந்ததால் தோல்வி அடைந்ததாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகரான ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியில், அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 43 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் 23 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்துக் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க வீரர் பெயர்ஸ்டோவ் 28 பந்துகளில் 48 ரன்களை விளாசினார்.

Sunrisers Hyderabad Team
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. (BCCI)

போட்டி முடிந்த பிறகு, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகரான ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களைச் சந்தித்ததார். அப்போது, “வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், இன்று ஆடுகளத்தின் தன்மை எங்களையே வியப்பில் ஆழ்த்தியது.

போட்டிக்கு முன் மைதான பராமரிப்பாளர்களிடம் பேசினோம். அப்போது, ஆடுகளம் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தது” என்று கூறினார்.

DD Ricky Ponting
டெல்லி அணியின் ஆலோசகர் பாண்டிங். (Twitter)

மேலும், “ஆடுகளம் எதிரணிக்கே சாதகமாக இருந்தது” என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதனால், பெரோஸ் ஷா கோட்லா மைதான பராமரிப்பாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஃபோட்டோவை கிழித்த ஆண்டர்சன்... பதிலடி கொடுத்த அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடைவிதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: IPL 2019