ஹீரோயிசம், பணிவு, நயம் ஆகியவற்றின் விளக்கமே! சாம் கரனே- தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா புகழாரம்

ஹீரோயிசம், பணிவு, நயம் ஆகியவற்றின் விளக்கமே! சாம் கரனே- தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா புகழாரம்

தோல்வி ஏமாற்றத்தில் சாம் கரன்.

தொழிலபதிபர் ஆனந்த் மகிந்திரா இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

 • Share this:
  தொழிலபதிபர் ஆனந்த் மகிந்திரா இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

  புனேயில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் சாம் கரனின் ஹீரோயிசம் வீணானனது, இந்தியா 7 ரன்களில் அபார வெற்றி பெற்றது, நடராஜனின் கடைசி ஓவர் சாம் கரன், இங்கிலாந்தின் வெற்றி கனவை தகர்த்தது.

  சாம் கரனை வீழ்த்த முடியவில்லை 95 நாட் அவுட். பிற்பாடு விராட் கோலி மற்றும் இந்திய அணியினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து சாம் கரன் ட்வீட் செய்தார்.

  330 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இங்கிலாந்து அணி 26வது ஓவரில் 168/6 என்று தடுமாறியது. இங்கிருந்து ஜெயிப்பது கடினம் என்ற நிலையில் இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். தனி நபராக அவர் வெற்றியை நோக்கி நடைபோட்டார்.

  8-ம் நிலையில் இறங்கி ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய கபில்தேவ் இன்னிங்ஸை ஆடிவிட்டார் சாம் கரன்.

  சாம் கரனின் அந்த பதற்றமற்ற உறுதி, நயம், பணிவு கண்டு தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா மிகவும் கவரப்பட்டுள்ளார்.  கரன் ட்வீட்டுக்குப் பதிலளிக்குமாறு பதிவிட்ட ஆனந்த் மகிந்திரா, “ஹீரோயிசம், பணிவு, நயம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டால் அது சாம் கரன்” என்று அவருக்கு பதிலளித்துள்ளார்.

  ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 8-ல் இறங்கி 95 விளாசிய முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் நிகழ்த்தினார். இலங்கைக்கு எதிராக கிறிஸ் வோக்ஸ் 95 ரன்களை இதே டவுனில் எடுத்த சாதனையை சாம் கரன் சமன் செய்தார்.

  இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது, இது கூட பொறுக்கவில்லை நம் கோலிக்கு, ஏன் ஷர்துல் தாக்கூர் இல்லையா, புவனேஷ்வர் குமார் இல்லையா என்று மலிவான கேள்வியை எழுப்பினார்.
  Published by:Muthukumar
  First published:

  சிறந்த கதைகள்