ஆஸி.க்கு எதிரான தோல்வியே இந்தியாவுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை: ராகுல் டிராவிட்!

Defeat to #Australia warning sign for India ahead of #WorldCup: #RahulDravid | 2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.

news18
Updated: March 21, 2019, 2:04 PM IST
ஆஸி.க்கு எதிரான தோல்வியே இந்தியாவுக்கு மிகப்பெரிய எச்சரிக்கை: ராகுல் டிராவிட்!
ராகுல் டிராவிட். (BCCI)
news18
Updated: March 21, 2019, 2:04 PM IST
சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்ததால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கவனமாக இருக்க வேண்டும் என ஜாம்பவான் டிராவிட் எச்சரித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

டி-20 தொடரை 0-2 என இழந்த இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 2-3 என தோல்வி அடைந்தது. இந்திய மண்ணில் 10 ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு நாள் தொடரை வென்று ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்தது.

Virat Kohli, விராட் கோலி
ஆட்டமிழந்து வெளியேறும் விராட் கோலி. (Twitter)


இதனைஅடுத்து, இந்திய கிரிக்கெட் அணி நேரடியாக உலகக்கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது. 2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடர் வரும் மே மாதம் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா இழந்ததால், உலகக்கோப்பை தொடரில் கோலி தலைமையிலான இந்திய அணி அதிக கவனமுடன் செயல்பட வேண்டும் என முன்னாள் வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்.

rahul dravid, ராகுல் டிராவிட்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். (BCCI)
Loading...
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய அணி வீரர்கள் நேரடியாக நடந்து சென்று உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய விஷயத்தை நினைவுபடுத்தி உள்ளது. அதனால் இளம் வீரர்கள் அதிக கவனமாக செயல்பட வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.

உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு CSK அணி உதவி!

பேட்ட ஸ்டைலில் தோனிக்கு 3டி மோஷன் போஸ்டர்.. CSK ரசிகர்கள் கொண்டாட்டம்!

Also Watch...

First published: March 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...