ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தீபக் சஹர் விலகல்… அணியில் இணைகிறார் வாஷிங்டன் சுந்தர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தீபக் சஹர் விலகல்… அணியில் இணைகிறார் வாஷிங்டன் சுந்தர்

தீபக் சஹர்-வாஷிங்டன் சுந்தர்

தீபக் சஹர்-வாஷிங்டன் சுந்தர்

3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்த டி20 தொடரில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து தற்போது ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

  லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதற்கு இந்தியாவின் மந்தமான பேட்டிங்கே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

  ‘பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன’ - ஹர்பஜன்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு…

  குறிப்பாக இந்திய அணியின் இளம் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், இஷன் கிஷன் ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மதியம் நடைபெற உள்ளது.

  இந்த தொடரில் காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

  ”ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கின் இந்த சீசன் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்”- ஃஎப்.எஸ்.டி.எல் தலைவர் நீதா அம்பானி!

  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்: ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ். அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Cricket