”அவர் அளித்த ஊக்கம்; இவர் அளித்த அறிவுரை...” 6 விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர் நெகிழ்ச்சி

”அவர் அளித்த ஊக்கம்; இவர் அளித்த அறிவுரை...” 6 விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர் நெகிழ்ச்சி
  • News18
  • Last Updated: November 12, 2019, 8:54 AM IST
  • Share this:
சென்னை சூப்பர் கிங்கிஸ் அணிக்காக விளையாடி அனுபவத்தின் மூலமே சர்வதேச போட்டியில் சாதிக்க முடிந்ததாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

இந்தியா - வங்கதேசம் இடையிலான டி-20 கிரிக்கெட் தொடரில், கடைசிப் போட்டி, நாக்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்தியா, 2-1 என டி-20 தொடரையும் வென்றது.

சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர், ஆண்கள் இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அவர் 3.2 ஓவர்கள் வீசி, 7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், குறைந்த ரன்கள் விட்டுக்கொண்டுத்து அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமைக்கும் உரித்தானார்.


சென்னை சூப்பர் கிங்கிஸ் அணிக்காக விளையாடி அனுபவத்தின் மூலமே சர்வதேச போட்டியில் சாதிக்க முடிந்ததாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் தற்போது சிறப்பாக செயல்பட முடிவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இரவில், பனிப்பொழிவையும், வியர்வையையும் எவ்வாறு எதிர்கொண்டு விளையாடுவது என்பதைக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முந்தைய போட்டியில் இறுதிகட்டத்தில் நெருக்கடி இல்லாமல் பந்துவீச ரோஹித் சர்மாவின் அறிவுரை உதவியாக இருந்ததாகவும் சாஹர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, காய்ந்த மண்ணை அடிக்கடி கைகளில் தேய்துக் கொண்டுதான் பந்து வீசுவேன் என்றும், இதனால் பந்து தனது கையை விட்டு நழுவாமல், இறுக்கமாகப் பிடித்து வீச முடிவதாகவும் சாஹர் கூறியுள்ளார்.
First published: November 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading