உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்க அணிக்கு டி-வில்லியர்ஸ் மீண்டும் திரும்புவது சாத்தியமா?

#ICCWorldCup2019 | #AbeDeVilliers | காயம், முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆட முடியாது என்ற காரணத்தால் ஓய்வு அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.

உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்க அணிக்கு டி-வில்லியர்ஸ் மீண்டும் திரும்புவது சாத்தியமா?
டி-வில்லியர்ஸ்
  • News18
  • Last Updated: June 7, 2019, 5:58 PM IST
  • Share this:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென்ஆப்பிரிக்க அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டின் முன்னாள் அதிரடி வீரரான டி-வில்லியர்ஸ், மீண்டும் அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

'மிஸ்டர் 360' என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் தென்னாப்ரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், நவீன கிரிக்கெட்டில் புதுபுது ஷாட்களை ஆடுவதில் கை தேர்ந்தவராக திகழ்ந்தார். இவரின், அதிரடியால், தென்னாப்ரிக்கா மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களையே தன்னகத்து ஈர்த்து வைத்திருந்தார்.

இவர், கடந்த 2018 மே மாதம், சர்வதேச போட்டியில் இருந்த ஓய்வுபெறுவதாக அறிவித்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்தார். தற்போது நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் இவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு தென்னாப்ரிக்கா கிரிக்கெட்டிற்கே பேரிடியாக அமைந்தது.


காயம், முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த டிவில்லியர்ஸ், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், முன்பு போல் அதிரடியாக ஆட முடியாது என்ற காரணத்தால் ஓய்வு அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்ரிக்கா அணி அறிவிப்பதற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை டிவில்லியர்ஸ் தொடர்பு கொண்டதாகவும், தன்னை அணியில் சேர்த்துக்கொள்ள கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ஓய்வு அறிவித்துவிட்டு அணியில் ஓராண்டாக விளையாடாத ஒருவரை, உலகக் கோப்பைக்காக சேர்ப்பது ஏற்புடையதல்ல என கூறி, தென்னாப்ரிக்கா  கிரிக்கெட் வாரியம், டிவில்லியர்ஸ் கோரிக்கையை நிரகரித்ததாக கூறப்படுகிறது.நடப்பு உலகக் கோப்பை லீக் போட்டியில், தென்னாப்ரிக்கா அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ளது. ஒருவேளை, டிவில்லியர்ஸ் விருப்பத்திற்கு தென்னாப்ரிக்கா கிரிக்கெட் வாரியம், பச்சைக் கொடி காட்டியிருந்தால் அந்த அணிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்குமா என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு முன்பு, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான் கான், 1987-ல் திடீரென ஓய்வு அறிவித்தார். ஆனால், அப்போதைய ராணுவ ஜெனரலின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் அணியில் இணைந்தார். இவரின், தலைமையில் 1992 உலக் கோப்பையில் களம் கண்ட பாகிஸ்தான், முதல் முறையாக சாம்பியன் மகுடம் சூடியது.

இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்காக டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பி இருந்தால், அதிசயம் ஏதும் நிகழாவிட்டாலும், தென்னாப்ரிக்கா மோசமான தோல்விகளை சந்தித்து இருக்காது என்று அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.

Also Watch

First published: June 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading