டெல்லியை சமாளிக்க சென்னை அணியில் முக்கிய மாற்றம்?

#DCvsCSK: Predicted playing XI for #MSDhoni-led #CSK | இரு அணிகளும் முதல் போட்டியில் பலம் வாய்ந்த அணியை வீழ்த்தியுள்ளன.

Web Desk | news18
Updated: March 26, 2019, 3:48 PM IST
டெல்லியை சமாளிக்க சென்னை அணியில் முக்கிய மாற்றம்?
மைதானத்தில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)
Web Desk | news18
Updated: March 26, 2019, 3:48 PM IST
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங்கை சமாளிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி முதல் இந்தியாவில் களைகட்டி வருகிறது. இந்தத் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

Dhoni, Shreyas Iyer, Table Tennis
தோனி - ஷ்ரேயாஸ் ஐயர். (IPL)


டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 5-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் பலம் வாய்ந்த அணியை வீழ்த்தியுள்ளன.

சென்னை அணியைப் பொறுத்தவரை, தொடக்க வரிசை பேட்ஸ்மேன்களான ஷேன் வாட்சன். அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். மிடில் ஆர்டரில் தோனி, கேதர் ஜாதவ், பிராவோ உள்ளனர். இதனை அடுத்து, ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் என 3 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். கேதர் ஜாதவ், பிராவோவும் சில ஓவர்கள் வீசுகின்றனர். வேகப்பந்து வீச்சில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் உள்ளனர்.

Ambati Rayudu, IPL
பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ராயுடு. (IPL)


சென்னை அணி வலுவாக இருந்தாலும், டெல்லி அணியைப் போல் ரன் குவிக்க கூடுதலாக ஒரு அதிரடி பேட்ஸ்மேன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் நீக்கப்பட்டு டூ பிளெசிஸ் சேர்க்கப்படலாம்.
Loading...
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன் அணி: ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி, கேதர் ஜாதவ், பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சஹார், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் அல்லது டூ பிளெசிஸ்.

அஸ்வின் செய்தது அவுட்டாக்கியது சரியா? தவறா? கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து!

VIDEO: டேபிள் டென்னிஸ் போட்டியிலும் கலக்கும் தல தோனி!

விக்கெட் எடுத்த அஸ்வின்... கடுப்பான பட்லர்!

Also Watch..First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...