Video: சர்ச்சைக்குரிய வகையில் எல்.பி.டபுள்யூ அவுட்டான மிட்செல்!

#DarylMitchell controversially given out #LBW | நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. #INDvNZ

Video: சர்ச்சைக்குரிய வகையில் எல்.பி.டபுள்யூ அவுட்டான மிட்செல்!
மிட்செல் விக்கெட்டை வீழ்த்திய க்ருனல் பாண்டியா. (Twitter)
  • News18
  • Last Updated: February 8, 2019, 4:31 PM IST
  • Share this:
இந்தியா உடனான 2-வது டி-20 போட்டியில் நியூசிலாந்து வீரர் மிட்செல் சர்ச்சைக்குரிய வகையில் எல்.பி.டபுள்யூ அவுட் முறையில் வெளியேறி காட்சி வைரலாகி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி, ரோகித் சர்மா (50), ரிஷப் பண்ட் (40) உள்ளிட்டோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.


Rohit Sharma, ரோகித் சர்மா.
அதிரடி காட்டிய ரோகித் சர்மா. (ICC)


போட்டியின் இடையே நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின்போது, 6-வது ஓவரை க்ருனல் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் நியூசிலாந்து வீரர் மிட்செல் எல்.பி.டபுள்யூ ஆனதாக அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால், நியூசிலாந்து தரப்பில் டி.ஆர்.எஸ் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Daryl Mitchell, மிட்செல்
ஹாட் ஸ்பாட்டில் பேட்டில் பந்து பட்ட காட்சி.
நிழல் படமாக தெரியும் ஹாட் ஸ்பாட்டில் பேட்டில் பந்து பட்டு பின்னர் பேடில் படுவது தெரிந்தது. உடனே, ஒலியை ஆய்வு செய்யும் ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பேட்டில் பட்டதற்கான சத்தம் பதிவாகவில்லை. இதனால், 3-வது அம்பயர் அவுட் என அறிவித்ததால், மிட்செல் ஒரு ரன்னில் பரிதாபமாக வெளியேறினார்.



இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

#NZvINDT20: 2-வது போட்டியில் ரோகித் அதிரடி... நியூசிலாந்துக்கு இந்தியா பதிலடி...!

Also Watch...

First published: February 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்