இந்திய வேகத்தில் சிதறிய வங்கதேசம்... 6 விக்கெட்களை இழந்து திணறல்... தொடர்ந்து 3 பேர் ‘டக்’ அவுட்...!

India vs Bangladesh | Day Night Test | இம்ருல் கயஸை அடுத்து களமிறங்கிய கேப்டன் மோமினுல் ஹக், முஹமது மிதுன், முஸ்தஃபிர் ரஹிம் மூவரும் டக்-அவுட்டாகி வெளியேறினர்.

இந்திய வேகத்தில் சிதறிய வங்கதேசம்... 6 விக்கெட்களை இழந்து திணறல்... தொடர்ந்து 3 பேர் ‘டக்’ அவுட்...!
INDvsBAN
  • Share this:
ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சில் சிக்கி வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிக்கொடுத்துள்ளது.

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கொல்கத்தா, ஈடன் கார்டன் மைாதனத்தில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஷாட்மேன் இஸ்லாம், இம்ருல் கயஸ் களமிறங்கினர். இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா முதல் ஓவரை வீசினார். வங்கதேச அணி 15 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் 4 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.


இதன் மூலம் பிங்க் பந்தில் விக்கெட் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் சர்மா பெற்றுள்ளார்.

இம்ருல் கயஸை அடுத்து களமிறங்கிய கேப்டன் மோமினுல் ஹக், முஹமது மிதுன், முஸ்தஃபிர் ரஹிம் மூவரும் டக்-அவுட்டாகி வெளியேறினர். பொறுமையாக விளையாடிய இஸ்லாம் 29 ரன்னில் அவுட்டாகினர். வங்கதேச அணி 73 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்து வருகிறது.இந்திய பந்துவீச்சாளர்களில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்களையும், ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளார்.
First published: November 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...