சொன்னதை செய்து காட்டிய டேவிட் வார்னர்!

ஹைதராபாத் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

சொன்னதை செய்து காட்டிய டேவிட் வார்னர்!
டேவிட் வார்னர்
  • News18
  • Last Updated: May 3, 2019, 9:41 AM IST
  • Share this:
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னால் 500 ரன்களுக்கு மேல் அடிப்பேன் என்று வார்னர் சொன்னதாக விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறியுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருட தடைக்கு பிறகு ஐ.பிஎ.ல் போட்டி மூலம் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பினார் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர். இவர் தற்போது ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் வார்னர். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 692 ரன்களை அடித்துள்ளார். தற்போது ஆரஞ்ச் கேப் அவரிடம் தான் உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் 8 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார், ஒரு போட்டியில் சதம் அடித்துள்ளார்.


டேவிட் வார்னர் குறித்து பேசிய விவிஎஸ் லக்‌ஷ்மண், ‘ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்னே ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரிடம் டேவிட் வார்னர் இந்த தொடரில் நிச்சயம் 500 ரன்களுக்கும் மேல் அடிப்பேன் என கூறினார்.
அதேபோல் அவர் செய்ததை பார்த்த போது சந்தோஷமாக இருந்தது. அதே நேரம் அவர் 500 ரன்களுக்கு மேல் அடித்ததில் ஆர்ச்சரியமும் இல்லை. ஏனென்றால் 2014, 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரிலும் அவர் 500 ரன்களுக்கு மேல் அடித்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் உலகக்கோப்பை நெறுங்கி வருவதால் பயிற்சிக்காக டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா புறப்பட்டார். வார்னர் இல்லாதது ஹைதராபாத்துக்கு பின்னடைவே. வார்னரின் ஓபனிங்கை ஹைதராபாத் அணியினர் நிச்சயம் மிஸ் செய்வார்கள் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறியுள்ளார்.ஹைதராபாத் அணி 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.






Also see:


Also watch

First published: May 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading