முகப்பு /செய்தி /விளையாட்டு / பதான் பட ஷாரூக்கானாக மாறிய டேவிட் வார்னர்… லைக்ஸை குவிக்கும் இன்ஸ்டா வீடியோ

பதான் பட ஷாரூக்கானாக மாறிய டேவிட் வார்னர்… லைக்ஸை குவிக்கும் இன்ஸ்டா வீடியோ

ஷாரூக்கான் - டேவிட் வார்னர்

ஷாரூக்கான் - டேவிட் வார்னர்

அடுத்த மாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பதான் படத்தில் ஷாருக்கானை போன்ற தோற்றத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கவனம் பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ, லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள பதான் திரைப்படம் கடந்த புதனன்று வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று வரை இந்த திரைப்படம் உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் வசூலை பெறவில்லை. ஆமிர் கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்த படங்கள் வர்த்தக ரீதியில் தோல்வி அடைந்தன. இந்தநிலையில் பதான் திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருவதால் படக்குழுவினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் அடுத்தடுத்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இந்தி திரையுலகில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பதான் படத்தின் பாடல் காட்சிகளை எடிட் மற்றும் மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளார்.




 




View this post on Instagram





 

A post shared by David Warner (@davidwarner31)



இதில் அவர், ஷாருக்கானை போன்ற தோற்றத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் உள்ளன. இன்ஸ்டாகிராமில் டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி லைக்ஸ்களை குவிக்க தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket