சச்சினின் இமாலய சாதனையை முறியடிக்கக் காத்திருக்கும் வார்னர்...!

ICC World Cup 2019 | David Warner | Sachin Tendulkar | நடப்பு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தை அலங்கரித்துள்ளார்

Web Desk | news18
Updated: June 28, 2019, 3:24 PM IST
சச்சினின் இமாலய சாதனையை முறியடிக்கக் காத்திருக்கும் வார்னர்...!
சச்சின் - வார்னர்
Web Desk | news18
Updated: June 28, 2019, 3:24 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விளையாட்டு உலகில் நிகழ்த்தப்படும் சாதனைகள் அனைத்தும் ஒவ்வொரு கால கட்டத்திலும் முறியடிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

முன்னாள் இந்திய வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களும் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் சதத்தில் சதம் கண்ட வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


இச்சாதனையை யாரும் நெருங்க முடியாது என்பதை விட, நினைத்துக் கூட பார்க்க முடியாது என அன்றைய தினம் கூறப்பட்டது. ஆனால், ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை, தற்போது 30 வயதாகும் இந்திய கேப்டன் விராட் கோலி 41 சதங்கள் விளாசியுள்ளார்.

எனவே, விரைவில் சச்சினின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், டெஸ்ட்டிலும் 25 சதங்களை பதிவு செய்துள்ளார்.

Also Read :  புதிய சாதனை படைத்த 'ரன்மெஷின்' விராட் கோலி!

Loading...இந்த வரிசையில், உலகக் கோப்பை கிரிக்கெட்டில், ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை சச்சின் நிகழ்த்தினார். 2003 தொடரில் 11 ஆட்டங்களில் விளையாடிய சச்சின், ஒரு சதம், 6 அரைசதங்களுடன் மொத்தம் 673 ரன்கள் குவித்தார்.

இதுவே, உலகக் கோப்பையில் ஒரு தொடரில் அடிக்கப்பட்ட தனிப்பட்ட வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்களாக உள்ளது.

சச்சினை தொடர்ந்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன், 2007 உலகக் கோப்பையில் அதிரடியில் மிரட்டினார். இவர், 11 ஆட்டங்களில் 3 சதம், ஒரு அரைசதத்துடன் 659 ரன்கள் குவித்தார். இதன் மூலம், இரண்டாவது இடம் வகிக்கிறார்.

இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தை அலங்கரித்துள்ளார். இவர், 7 போட்டிகளில், 2 சதங்கள், 3 அரைசதங்களுடன் 500 ரன்கள் விளாசியுள்ளார்.

Also Read : உலகக்கோப்பை தொடரில் வார்னர்-பின்ச் ஜோடி சாதனை!இவருக்கு, அடுத்தபடியாக மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஆரோன் பின்ச், இரண்டாவது இடம் வகிக்கிறார். இவர், 7 போட்டிகளில் 2 சதங்கள், 3 அரைசதங்களுடன் 496 ரன்கள் குவித்துள்ளார்.

லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளது. எனவே, முழுமையாக 3 போட்டிகள் உள்ளன.அத்துடன், இறுதிக்கும் ஆஸ்திரேலியா முன்னேறினால் சச்சின் சாதனையை முறியடிக்க வார்னர், ஆரோன் ஃபின்ச்-க்கு அதிக வாய்ப்புள்ளது.

Also Read : 'அவுட்டா இது?' அம்பயர் முடிவால் விரக்தியடைந்த ரோஹித் சர்மா மனைவி - வீடியோ

Also Watch

First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...