ஆஷஸ் தொடரில் அவுட்டாகி வெளியேறிய வார்னரை அசிங்கப்படுத்திய இங்கிலாந்து ரசிகர்கள் - வீடியோ

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித், வார்னர் இருவரும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக ஓராண்டு விளையாட தடைவிதிக்கப்பட்டது.

ஆஷஸ் தொடரில் அவுட்டாகி வெளியேறிய வார்னரை அசிங்கப்படுத்திய இங்கிலாந்து ரசிகர்கள் - வீடியோ
ஆஷஸ் தொடர்
  • News18
  • Last Updated: August 1, 2019, 9:20 PM IST
  • Share this:
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் அவுட்டாகி டேவிட் வார்னர் வெளியேறும் போது இங்கிலாந்து ரசிகர்கள் எழுந்து நின்று உப்புத்தாளை உயர்த்தி காட்டினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பிரிங்காம் மைதானத்த்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெய்னி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக பென்கார்ஃபட், வார்னர் களமிறங்கினர். போட்டியின் 4வது ஓவரில் டேவிட் வார்னர் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஃபராடு வீசிய பந்தில் எல்.பி.டபுள்.யூ முறையில் அவுட்டாகினார்.


Also Read : ஆரம்பமாகும் ஆசஸ் தொடர்.... ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பற்றி தெரியுமா?

வார்னர் மைதானத்தைவிட்டு வெளியேறும் போது இங்கிலாந்து ரசிகர்கள் எழுந்து நின்று உப்புத்தாளை காண்பித்து கேலி செய்தனர்.ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித், வார்னர் இருவரும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக ஓராண்டு விளையாட தடைவிதிக்கப்பட்டது.

ஒராண்டு தடைக்குபின் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போதும் இவர்களை ரசிகர் ஏமாற்றுக்காரர்கள் என்று அழைத்தனர். இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை சிலர் கேலி செய்த போது விராட் கோலி அவரை கேலி செய்யாமல் கைதட்டி வரவேற்பு தெரிவிக்க சொன்னார் என்பது குறிப்பிடதக்கது.

இங்கிலாந்து மைதானங்களில் ஆஸ்திரேலியாவின் வார்னர், ஸ்மித் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகவே உள்ளது.

Also Read : இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால்? டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிகள்...

Also Read: மியாமியில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி!

First published: August 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading