டேவிட் வாரன்ர், எலிஸ் பெர்ரிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் உயரிய விருது.. மேடையில் வார்னர் நெகிழ்ச்சிக் கண்ணீர்

டேவிட் வாரன்ர், எலிஸ் பெர்ரிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் உயரிய விருது.. மேடையில் வார்னர் நெகிழ்ச்சிக் கண்ணீர்
எலிஸ் பெர்ரி - டேவிட் வார்னர்
  • Share this:
ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர்களுக்கான ஆலன் பார்டர் விருதை டேவிட் வார்னரும், சிறந்த வீராங்கனைக்கான பெலிண்டா கிளார்க் விருதை எல்லிஸ் பெர்ரி வென்றுள்ளார்.

2018ல் விதிக்கப்பட்ட ஒராண்டு தடைக்கு பின் டேவிட் வார்னர் உலகக் கோப்பை தொடரில் களமிறங்கினார். உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 647 ரன்கள் குவித்து ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வார்னர் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.

ஆலன் பார்டர் விருதை 3 முறை டேவிட் வார்னர் வென்றுள்ளார். இதேப்போன்று எல்லிஸ் பெர்ரியும் பெலிண்டா கிளார்க் விருதை 3 முறை வென்றுள்ளார். எல்லிஸ் பெர்ரி ஆஸ்திரேலிய மகளிர் அணியில் சிறந்த ஆல்-ரவுண்டராக உள்ளார்.


ஆலன் பார்டர் வென்றை பெற்ற பின் டேவிட் வார்னர் மேடையில் உருக்கமாக பேசினார். அப்போது, “ஒரு வருட தடைக்கு பின் ஆஸ்திரேலிய அணியில் விளையாடி இந்த விருதை வென்றது கௌரவமாக உள்ளது. தடை காலத்தில் எங்களை அவ்வப்போது தொடர்புகொண்டு எங்களுக்கு ஊக்கமளித்த தற்போதைய ஆஸ்திரேலிய கேப்டன்களான டிம் பெய்ன், பிஞ்ச் ஆகியோருக்கு நன்றி. என்னுடைய கடினமான காலங்களில் எனது மனைவி தான் உறுதுணையாக இருந்தார். எனது 3 மகள்களுக்கும் சிறந்த தந்தையாகவும், முன்மாதிரியாகவும் இருக்க விரும்புகிறேன், அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்“ என்று தெரிவித்தார். 
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்