முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஐ’ படத்தின் விக்ரம் கெட்டப்புக்கு மாறிய டேவிட் வார்னர்… புதிய வீடியோ வைரல்

‘ஐ’ படத்தின் விக்ரம் கெட்டப்புக்கு மாறிய டேவிட் வார்னர்… புதிய வீடியோ வைரல்

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

சண்டைக் காட்சி ஒன்றில், விக்ரம் படத்திற்கு பதிலாக தனது முகத்தை எடிட் செய்து ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐ படத்தின் விக்ரம் கெட்டப்புக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மாறியுள்ளார். ஐ படத்தின் சண்டைக் காட்சிகளில் விக்ரம் முகத்திற்கு பதிலாக தனது முகத்தை எடிட் செய்து, வார்னர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. விக்ரம் நடித்த படங்களில் ஐ திரைப்படம் குறிப்பிடத்தக்க ஒன்று. ஷங்கர் இயக்கிய இந்த படத்தில் லிங்கேசா என்ற பாடி பில்டர் கேரக்டரில் விக்ரம் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக மலையாள நடிகர் சுரேஷ் கோபி இடம் பெற்றிருந்தனர்.

ஐ படத்தின் சண்டைக் காட்சிகள் கவனம் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தன. இந்நிலையில், சண்டைக் காட்சி ஒன்றில், விக்ரம் படத்திற்கு பதிலாக தனது முகத்தை எடிட் செய்து ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.




 




View this post on Instagram





 

A post shared by David Warner (@davidwarner31)



இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 4 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் காயம் காரணமாக டேவிட் வார்னர் விலகி, தாயகம் திரும்பியுள்ளார். 3ஆவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வரும் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் தொடரை கைப்பற்றுவதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப போட்டியின் இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்று விடும். இதனால் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cricket