ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த 2வது வீரர் - புதிய சாதனை படைத்த வார்னர்...!

100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த 2வது வீரர் - புதிய சாதனை படைத்த வார்னர்...!

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

தென்னாப்பிரிக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் இன்னிங்கிஸில் அனைத்து விக்கெட்டுகளையும இழந்து 189 ரன்கள் மட்டும் எடுத்தது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்ற தென்னாப்பிரிக்க அணி தற்போது மெல்போர்னில் நடைபெரும் 3வது டெஸ்ட்டில் விளையாடிவருகிறது.இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் இன்னிங்கிஸில் அனைத்து விக்கெட்டுகளையும இழந்து 189 ரன்கள் மட்டும் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது. வார்னர் 32 ரன்களுடனும், லபுஷேன் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.இதனையடுத்து இன்று அபாராமாக விளையாடிய டேவிட் வார்னர் 144 பந்துகளில் சதமடித்தார். இதன் மூலம் 100வது டெஸ்ட்டில் சதமடித்த 10வது வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். தொடர்ந்து அதிரடி காட்டிய வார்னர் தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்து 254 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். மொத்தமாக 2 சிக்ஸரும், 16 பவுண்டரிகளையும் வார்னர் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 100வது டெஸ்ட்டில் இரட்டை சதமடித்த 2வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். முதல் இடத்தில் இங்கிலாந்து வீரர் அலாஸ்டர் குக் இருக்கிறார்.

இதன் ஒரு பகுதியாக தசை பிடிப்பு காரணமாக ஆட்டத்தை தொடர முடியாமல் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் 200 ரன்களுடன் வெளியேறினார். இந்நிலையில்,

ஆஸ்திரேலிய அணி 83 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. 2வது நாள் ஆட்ட நேர முடிவில் டிராவிஸ் ஹெட் 33 ரன்களுடனும் கிரீன் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

First published:

Tags: Australia, Cricket, David Warner