'புட்ட பொம்மா' பாடலுக்கு அசத்தலாக டான்ஸ் ஆடிய வார்னர் தம்பதி - வீடியோ

David Warner | வார்னரும் அவர் மனைவியும் ஆடிய நடனத்தை பாராட்டி ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

'புட்ட பொம்மா' பாடலுக்கு அசத்தலாக டான்ஸ் ஆடிய வார்னர் தம்பதி - வீடியோ
  • Share this:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புட்ட பொம்மா பாடலுக்கு தன் மனைவியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கினால் வீட்டில் இருக்கும் தங்களது அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படமாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனுமான வார்னர் புட்ட பொம்மா என்ற தெலுங்கு பாடலுக்கு அவரது மனைவி கேண்டிஸ் உடன் அசத்தலாக டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
View this post on Instagram
 

It’s tiktok time #buttabomma get out of your comfort zone people lol @candywarner1


A post shared by David Warner (@davidwarner31) on


புட்டா பொம்மா தெலுங்கு பாடலுக்கு அல்லு அர்ஜூன் மற்றும் பூஜா ஹெக்டே இடுப்பை வளைத்து, வளைத்து ஆடும் நடனம் மிகவும் பிரபலமடைந்தது. அதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் முதல் பலர் அந்த பாடலுக்கு தாங்கள் நடனமாடிய வீடியோவை டிக் டாக்கில் பதிவு செய்து வந்தனர். தற்போது வார்னரும் அவரது மனைவியும் இந்த பாடலுக்கு ஆடிய டான்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.First published: May 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading