Home /News /sports /

இங்கிலாந்து மைதானத்திலேயே அவமானப்படுத்தப்பட்ட டேவிட் வார்னர்!

இங்கிலாந்து மைதானத்திலேயே அவமானப்படுத்தப்பட்ட டேவிட் வார்னர்!

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

ஓராண்டு தடை முடிந்து வார்னர், ஸ்மித் இருவரும் தற்போது அணிக்கு திரும்பியது மட்டுமின்றி உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

  • News18
  • Last Updated :
உலகக் கோப்பைத் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை மைதானத்தில் இருந்த ஒருவர் கேலி செய்துள்ளார்.

ஆஸ்திரலேியாவின் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. தடை முடிந்து இருவரும் தற்போது அணிக்கு திரும்பியது மட்டுமின்றி உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளதால் அந்த அணிக்கு மேலும் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து எதிரான பயிற்சி ஆட்டம் இன்று தெடாங்கியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக வர்னார், பின்ச் களமிறங்கினார்கள்.



டேவிட் வார்னர் கிரிஸில் இருந்த போது மைதானத்தில் இருந்த ஓருவர் 'ஏமாற்றுக்காரனே வெளியே போ' என்று கூச்சலிட்டார். இதனால் போட்டியின் போது சலசலப்பு ஏற்பட்டது. இதனை பொருட்படுத்தாமல் ஆடிய டேவிட் வார்னர் 43 ரன்கள் எடுத்தார்.

இதற்கு முன்னரே இங்கிலாந்தின் பிரபலமான ரசிகர் கூட்டமான 'பார்மி ஆர்மி' வர்னரை கேலி செய்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது.



அதில் ஆஸ்திரேலிய சீருடையுடன் வார்னர் இருக்கும் புகைப்படத்தில் சீருடையில் ஆஸ்திரேலியா என்ற இடத்தில் ''ஏமாற்றுக்காரர்கள்''(cheats)என்று மாற்றி எழுதிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது.

ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை தொடர்ந்து ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி 4 மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த 2 தொடர்களிலும் ஆஸ்திரேலிய அணி விமர்சனங்ளை எதிர்கொள்வது பெரிய சவாலாக இருக்கும்.

Also Read: #INDvNZ Live Score Updates | உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பேட்டிங்

Also Read : இந்தியா – நியூசிலாந்து இன்று மோதல்… பயிற்சியின் போது இளம்வீரர் காயம்…!

Also Read : உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம் : தென்னாப்பிரிக்காவிடம் சுருண்டது இலங்கை!

Also Watch

Published by:Vijay R
First published:

Tags: David Warner, ICC Cricket World Cup 2019, ICC world cup, World cup cricket 2019

அடுத்த செய்தி