Home /News /sports /

பிஞ்ச் ஓய்வால் கேப்டனாகிறார் டேவிட் வார்னர்: தடையை நீக்க கோரிக்கை

பிஞ்ச் ஓய்வால் கேப்டனாகிறார் டேவிட் வார்னர்: தடையை நீக்க கோரிக்கை

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

சிறப்பாக ஆடும் 35 வயதான வார்னரால் கேப்டனாக முடியவில்லை. இதனால் தனக்கு விதிக்கப்பட்ட கேப்டன்ஷிப் தடையை விலக்கும்படி தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiaenglandenglandengland
    ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் கேப்டன் ஏரோன் பிஞ்ச் ஓய்வு பெற்றுவிட்டதால், அந்த கேப்டன் பொறுப்புக்கு வார்னர் வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதனையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் தன் கேப்டன்ஷிப் தடையை நீக்க வார்னர் பேச்சு வார்த்தை நடத்தவிருக்கிறார்.

    தென் ஆப்பிரிக்காவில் பந்தை சேதம் செய்து அகப்பட்டு கொண்ட விவகாரத்தில் ஸ்மித், வார்னர் உள்ளிட்ட 3 வீரர்கள் தடைசெய்யப்பட்டு பிறகு தடைக்காலம் முடிந்தது, ஆனால் வார்னர் மீதான கேப்டன்ஷிப் தடை இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இப்போது பிஞ்ச் இல்லாததால் கேப்டன்ஷிப் தடையை நீக்க வார்னர் பேச்சு வார்த்தை நடத்தவிருக்கிறார். தடை முடிந்து ஒரு வீரராக சிறப்பாக ஆடும் 35 வயதான வார்னரால் கேப்டனாக முடியவில்லை. இதனால் தனக்கு விதிக்கப்பட்ட கேப்டன்ஷிப் தடையை விலக்கும்படி தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
    இது குறித்து வார்னர்  அளித்த ஒரு பேட்டியில், 'கேப்டன்ஷிப் வாய்ப்பு குறித்து என்னிடம் எப்படி அணுகினாலும் அது கவுரவம் தான். ஆனால் என்னுடைய விஷயத்தை பொறுத்தவரை எல்லாமே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கையில் தான் உள்ளது. எனது பணி முடிந்த வரை சிறப்பாக விளையாடி ரன் குவிப்பது தான். கடந்த காலத்தில் நடந்தது போன விஷயம்.

    செல்போன் எனது பக்கத்திலேயே இருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் புதிய நிர்வாகிகள் உள்ளனர். கேப்டன்ஷிப் குறித்து அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு ஆலோசித்தால் அதற்கு பதில் அளிக்க எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன். அடுத்த சில வாரங்களில் பேச்சுவார்த்தை நடக்கக்கூடும் என்று நம்புகிறேன்' என்று வார்னர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.
    Published by:Srilekha A
    First published:

    Tags: David Warner

    அடுத்த செய்தி