உலகக்கோப்பை தொடரில் வார்னர்-பின்ச் ஜோடி சாதனை!

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், ஆரான் பின்ச் இருவரும் அரை சதம் கடந்தனர்

Prabhu Venkat | news18
Updated: June 25, 2019, 5:30 PM IST
உலகக்கோப்பை தொடரில் வார்னர்-பின்ச் ஜோடி சாதனை!
ஆஸ்திரேலியா
Prabhu Venkat | news18
Updated: June 25, 2019, 5:30 PM IST
உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஆரான் பின்ச் ஜோடி 50 ரன்களுக்கு மேல் அதிக முறை எடுத்து சாதனை படைத்துள்ளது.

உலகக்கோப்பை தொடர் 32-வது லீக் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், ஆரான் பின்ச் நிதானமாக விளையாடி அணிக்கு நிலையான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். 23-வது ஓவர் முடிவின் போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியின் மூலம் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஆரான் பின்ச் ஜோடி உலகக்கோப்பை தொடரில் 50 ரன்களுக்கு மேல் அதிக முறை அடித்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. டேவிட் வார்னர், ஆரான் பின்ச் ஜோடி 5 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது.

Also watch

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...