தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனின் மகள் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் கேன்சர் காரணமாக இறந்த அந்த சிறுமி டேவிட் மில்லரின் மகள் இல்லை என்று தெரியவந்துள்ளது.
நேற்று கிரிகெட்டர் டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறுமியுடன் இருக்கும் படங்களை பகிர்ந்து, அந்த சிறுமி இறந்ததாக கேப்ஷனும் இட்டார். இந்த படங்கள் சமூக வலைதலங்களில் வைரலானது. பலரும் அது டேவிட் மில்லரின் மகள் என்றும், அவருக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அவர் பதிவிட்ட அந்த சிறுமி, டேவிட் மில்லரின் மகள் இல்லை என்பதும், அந்த சிறுமி, டேவிட் மில்லரின் மிக பெரிய ரசிகை என்பதும் தெரியவந்துள்ளது. அந்த சிறுமி புற்றுநோயை எதிர்கொண்டு வந்ததும், நேற்று அந்த சிறுமி இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதையும் படிக்க : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இணைகிறார் வாஷிங்டன் சுந்தர்
டேவிட் மில்லர் தற்போது இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறார். இன்று நடக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் பகல் 1.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெல்லும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cancer, Cricket, Cricketer, India vs South Africa