இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் செயல்பாடு பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்களை குவித்தது. இந்திய அணியின் விராட் கோலி 113 ரன்களை எடுத்தார். கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்களும், சுப்மன் கில் 70 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியின் கேப்டன் தசுன் ஷனகா 108 ரன்களை எடுத்தார். 250 ரன்களுக்குள் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் ஷனகா சிறப்பாக விளையாடி ஸ்கோரை 300 ரன்களை தாண்ட செய்தார்.
இலங்கை விளையாடியபோது ஆட்டத்தின் கடைசி ஓவரை ஷமி வீசினார். அவர் 4ஆவது பந்தை வீச முற்பட்டபோது, இலங்கை கேப்டன் ஷனகா கிரீசுக்கு வெளியே நிற்பதை கவனித்த ஷமி, மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.
இதனால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு ஷனகா 98 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த ரன் அவுட் ஏற்பட்டதும் ஒரு காரணம்.
இந்திய டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… கம்மின்ஸ் தலைமையில் வீரர்கள் தயார்…
இதையடுத்து, அவுட்டிற்காக நடுவரிடமும் ஷமி அப்பீல் செய்தார். அப்போது உடனடியாக வந்த ரோகித் சர்மா ஷமியை சமாதானப்படுத்தி, அப்பீலை வாபஸ் பெறச்செய்தார்.
இதன்பின்னர் 4ஆவது பாலில் சிங்கிள் கிடைக்க, அடுத்து பேட் செய்த ஷனகா 5ஆவது பந்தில் பவுண்டரி விளாசி சதம் அடித்தார்.
கடைசி பந்தில் அவர் சிக்சரை பறக்கவிட இலங்கை 306 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் வெற்றிக்கு பின்னர், மன்கட் அவுட்டிற்கான அப்பீலை வாபஸ் பெற்றது குறித்து ரோகித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பதில் அளித்த அவர், ‘ஷனகாவை ஷமி மன்கட் முறையில் அவுட் செய்தபோது, எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஷனகா மிக சிறப்பாக விளையாடினார். அவரை மன்கட் முறையில் அவுட் செய்வது நன்றாக இருக்காது. அது எங்களால் முடியாது என்று நினைத்தோம். எனவே அப்பீலுக்கு போகவில்லை’ என்று கூறினார். ரோஹித்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rohit sharma