முகப்பு /செய்தி /விளையாட்டு / ENG vs NZ 2nd test- 2 கேட்ச்களை விட்ட ஜோ ரூட், ஒரே நாளில் 43 பவுண்டரிகள்- நியூசிலாந்து 169/4-லிருந்து 318/4

ENG vs NZ 2nd test- 2 கேட்ச்களை விட்ட ஜோ ரூட், ஒரே நாளில் 43 பவுண்டரிகள்- நியூசிலாந்து 169/4-லிருந்து 318/4

ஜோ ரூட் விட்ட கேட்ச்

ஜோ ரூட் விட்ட கேட்ச்

நாட்டிங்காமில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரான இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. 169/4 என்ற நிலையிலிருந்து கொண்டு சென்ற டேரல் மிட்செல் (81), டாம் பிளண்டெல் (67) ஆகியோர் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாட்டிங்காமில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரான இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. 169/4 என்ற நிலையிலிருந்து கொண்டு சென்ற டேரல் மிட்செல் (81), டாம் பிளண்டெல் (67) ஆகியோர் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.

இங்கிலாந்து அணி பீல்டிங்கில் மகா சொதப்பல். ஜோ ரூட் 2 கேட்ச்களையும் கிராலி ஒரு கேட்சையும் விட்டதால் மிட்செல், பிளண்டல் வெளுத்து வாங்கி விட்டனர். இதுவரை உடைக்க முடியாத 149 ரன்கள் என்ற அபாரக் கூட்டணி அமைத்தனர், முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்த இருவர்தான் 195 ரன்கள் கூட்டணி அமைத்து இங்கிலாந்துக்கு பெரிய தலைவலியாக மாறினர்.

டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் 2 மணி நேரம் பந்து லேசாக ஸ்விங் ஆனதோடு பந்துகள் சற்றே எழும்பின. குட் லெந்த்திலிருந்தே பவுன்ஸ் ஆனது. ஆனால் நியூசிலாந்து தொடக்க வீரர்கள் வில் யங் (47), டாம் லேதம் (26) ஆகியோர் சிறப்பாக பேட் செய்தனர் என்பதை விட இங்கிலாந்து பந்து வீச்சில் வேகம் இல்லை. மணிக்கு 130 கிமீ வேகம் வீசும் 4 பவுலர்களை வைத்துக் கொண்டு இந்தப் பிட்சில் என்ன செய்ய முடியும்?

கடைசியில் தொடக்க வீரர்களை ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்து வீழ்த்தினர். மீண்டும் இதே ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் பவுலிங் கூட்டணி பிரமாதமாக, ஆக்ரோஷமாக ஆடிய டெவன் கான்வே (46), ஹென்றி நிகோல்ஸ் (30) ஆகியோரை வீழ்த்த நியூசிலாந்து 169/4 என்று ஆனது.

ஆனால் இங்கிலாந்து பீல்டிங்கில் டைட்டாக இல்லாததால் முதல் செஷனில் 20 பவுண்டரிகள் விளாசப்பட மொத்தம் 43 பவுண்டரிகள் முதல் நாளில் விளாசப்பட்டது. 3 கேட்ச்கள் ஸ்லிப்பில் விடப்பட்டது. இரண்டு கேட்ச்களை விட்டார் ஜோ ரூட், கிராலி ஒரு கேட்சை விட்டார். ஜாக் கிராலி நிகோல்ஸுக்கு 17-ல் கேட்சை விட்டார்.

கேட்சை விடும் தருணத்தில் பிட்ச் பிளாட் ஆகிவிட்டது, ரன் குவிப்பு பிட்ச் ஆனது, இதனையடுத்து டேரில் மிட்செல் ஜேம்ஸ் ஆண்டர்சனை மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்து மொத்தம் 2 சிக்சர்களுடன் 9 பவுண்டரி உதவியுடன் 81 நாட் அவுட். பிளண்டெல் 8 பவுண்டரிகளுடன் 67 நாட் அவுட். நியூசிலாந்து 318/4.

First published:

Tags: England test, Joe Root, New Zealand