அமெரிக்காவில் மினியாபொலிஸ் மாகாணத்தில் போலீஸாரின் கொடூரமான தாக்குதலில் கறுப்பினத்தரவான ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு அமெரிக்காவில் மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தது.
பிரபலங்கள் பலர் இனவெறிக்கு எதிரான தாக்குதலுக்கு தனது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேற்கிந்திய வீரர் டேரன் ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஐசிசி மற்றும் இதர நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இனவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவத்திற்கு நாம் ஆதரவு அளிப்பது போல் ஆகி விடும். இது அமெரிக்காவில் மட்டுமல்ல, நாள்தோறும் நடைபெறும் பிரச்னை“ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐ.பி.எல் தொடரின் போது தான் இனவெறி தாக்குதலை எதிர்கொண்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஐ.பி.எல் தொடரில் தான் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினேன். அப்போது என்னையும், இலங்கை வீரர் திசரா பெரேராவையும் 'கலு' என்று அழைப்பார்கள். அப்போது இந்த வார்த்தைக்கு வேறு அர்த்தம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது கருப்பினத்தவர்களை சேர்ந்தவர்களை கிண்டல் செய்யும் வார்த்தை என்று அறிந்ததும் இப்போது கோபம் வருகிறது“ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் டேரன் ஷமி தன்னை 'கலு' என்று கேலி செய்தவர்கள் சகவீரர்களா அல்லது ரசிகர்களா, எப்போது நடந்தது என்ற விவரங்கள் ஏதும் பதிவு செய்யவில்லை. இந்தியாவில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடரில் இனவெறி தாக்குதல் புகார் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.