ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

அனைத்துவித கிரிக்கெட்டிலும் தடை.. பாலியல் புகாரால் தூக்கி எறியப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்!

அனைத்துவித கிரிக்கெட்டிலும் தடை.. பாலியல் புகாரால் தூக்கி எறியப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்!

இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா

இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா

வீரர்களின் ஒழுங்கு நடவடிக்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, Indiacolombo colombo

  பாலியல் புகாருக்கு ஆளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனைத்து போட்டிகளிலும் விளையாட தடை விதித்துள்ளது. இனி அணித் தேர்வில் தனஷ்காவின் பெயர் பரிசீலிக்கப்படாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

  முன்னதாக டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி வீரர் தனுஷ்கா குணதிலகாவை இளம் பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் ஆஸ்திரேலியா காவல்துறை கைது செய்தது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது பெண்ணுடன் தனுஷ்கா டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகியுள்ளார். கடந்த வாரம் சிட்னியில் உள்ள குடியிருப்பில் அந்த பெண்ணை சந்தித்த தனுஷ்கா அத்துமீறி பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல்துறையில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து தனுஷ்காவை கைது செய்த ஆஸ்திரேலிய காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

  இந்த சம்பவம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தனுஷ்கா அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க தடை விதித்துள்ளது. இந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று குற்றம் உறுதியானால் வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் வாரியம் உறுதி தெவித்துள்ளது.

  இதையும் படிங்க: டென்னிஸில் இப்படி ஒரு ஷாக்கா? 19 வயது வீரரிடம் வீழ்ந்த ஜோகோவிச்.. அதிர்ச்சி மேட்ச்!

  மேலும், வீரர்களின் ஒழுங்கு நடவடிக்கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த பாலியல் வழக்கு எப்போது முடியும் என உறுதியாகாததால் நாடு திரும்புவது எப்போது என்ற கவலையில் தனுஷ்காவில் உள்ளதாக அவரின் வழக்கறிஞர் அனந்தா அமரநாத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு வழக்கு விசாரணை முடிய ஓராண்டு ஆக வாய்ப்புள்ளதால் தனுஷ்கா இலங்கை திரும்புவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Cricketer, Rape, Sexual abuse, Sri Lanka